Short story
சமீபத்தில் ஒருநாள் திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை கேட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். மிகவும் களைப்பாக இருந்ததால் சரி ஆட்டோவில் சென்று விடலாம் என்று காத்திருந்தேன். ஆட்டோ வந்தது "ஏம்பா.. சித்திரகுளம் வரையா ?" " போலாம் சார் ." "எவ்வளவு கேக்கற ?" " என்ன வேனா குடு சார் .." அவன் அவ்வாறு கூறியதும் எனக்கு சிரிப்பு வந்தது. "என்ன சார் சிரிக்கரிங்க ?" என்றான் அமர்ந்தேன் "ஒன்னும் இல்லப்பா நீ கேட்டதும் எனக்கு ஒரு கதை ஞாபகம் வந்தது என் வீடு போய் சேர இன்னம் 15 நிமிஷம் ஆகும் .. இந்த கதையோட மகத்துவம் என்னன்னா நீ கடவுள் கிட்டக்க வேண்டிகிட்டேன்னா உன்னோட தகுதி க்கு ஏற்பதான் வேண்டிப்ப, ஆனா கடவுள் கிட்டக்க வேண்டிக்கும்போது கடவுளே நீ உந்தகுதிக்கு ஏற்ப என்ன செய்யணுமோ அத செய்ப்பா அப்படின்னு நீ வேண்டினா , கடவுளும் அவரோட தகுதிக்கு ஏற்ப உனக்கு நிறையாவே தருவாரு .. அதுமாதிரி இருந்தது நீ என்கிட்டக்க சொன்னது . " என்றேன் ஆட்டோகாரனிடம் அவனும் மிக ஆர்வமாக "சொல்லு சார் கேக்கறேன் " என்று கூறி விட்டு அவன் கேட்டு...