Posts

"..... நீங்கதான் உங்களை மாத்திக்கணும்..."

"..  நீங்க ... ? Mr ...." ".. சிவராமன் .. டாக்டர் .." " ... ஆ...  Mr  சிவராமன் ... நீங்க தான் உங்க  wife  அ புரிஞ்சிக்கணும் ..." "  இல்ல டாக்டர் ... முன்ன மாதிரி இல்ல எரிஞ்சி எரிஞ்சி விழறா ...சரியா தூங்கறது இல்ல .. மறந்து மறந்து போறா..." " அதான் சொல்றேனே ... அவங்க இப்ப மெனோபாஸ்  stage  ல இருக்காங்க .. இது இயற்கை.....இந்த டைம் ல நீங்க தான் அனுசரிச்சி போகனும்   அவங்க கோப பட்டா நீங்களும் சேர்ந்து கோப படாதீங்க ....அவங்களுக்கு இப்ப ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகக்கூடாது. அவங்க இப்ப முன்ன மாதிரி தன்னால எதுவும் செய்ய முடியல்லையே என்று ஒரு எரிச்சல் வரும். as a husband  நீங்க நிறையா அவங்களுக்கு அனுசரணையாவும் சின்ன சின்ன உதவிகளும் செய்யணும். அவங்கள தினமும் சாயந்திரம் அப்படியே காத்தாட வெளில அழைச்சி கிட்டு போங்க.  சீக்கிரம் அவங்க பழைய நிலைக்கு திரும்பிடுவாங்க... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... .....Mr. Sivaraman  நீங்கதான் உங்களை மாத்திக்கணும்." என்றாற் டாக்டர் கமலா. என்ன சார் அப்படி பாக்கறீங்க.. சார்  என

மகாலிங்கம்

Image
மகாலிங்கம்  சில நாட்களுக்கு முன்பு வடபழனிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன், கூட்டம் அதிகமில்லை,என்னையும் சேர்த்து ஐந்து  பேர ் இருந்தோம். ஒரு இளைஞன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் இருமிகொண்டிருந்தார் இரு பெண்மணிகள் (வேலைக்கு போய் கொண்டிருந்தார்கள் ) வேறு யாரும் இல்லை. கண்டக்டர் "பேப்பர் ல என்ன தம்பி செய்தி ?" என்றார்   "என்ன அக்கிரமம் பாருங்க அம்பத்துர்ல ஒரு ஸ்கூல் பையன் வாத்தியார் திட்டினார்னு தூக்கு போட்டுகிட்டானாம் ..இந்த வாத்யாருங்களுக்கு எப்படி பாடம் சொல்லி தர்றதுன்னே தெரியல்ல ..பாவம் அந்த பையன் உசிரு போயிடுச்சி .."   "ஏன் தம்பி அந்த வாத்தியார் ஏன் திட்டினாராம்.?" என்றார் பெரியவர்.   "அது ஒண்ணும்  இல்லைங்க அந்தபையன்தான் எப்பையும் கிளாஸ் பஸ்ட் வருவானாம் .. இந்தவாட்டி அவனுக்கு உடம்பு சரி இல்லை ரெண்டு மாசம் ஸ்கூல் போகல்ல அதுனால் என்ன பண்ணிட்டான் முழு ஆண்டு தேர்வுல  பிட் அடிச்சிட்டான் அதை அந்த வாத்தியார் பார்த்து கண்டிச்சிட்டு பேப்பர பிடிங்கிகிட்டு போயிட்டாரு .. இதுதான் விஷயம் ..இப்ப சொல்லுங்க அ

ஸ்கூலுக்கு நேரமாச்சு

(ஒரு கற்பனை துணுக்கு) "ராம்ஜி நீங்க இன்னைக்கி சாயந்திரம் வீட்டுக்கு கண்டிப்பாக வாங்களேன் " என்றாள் ஸ்ரீதரின் மனைவி. "உங்க ஸ்பெஷல் அடை பண்ணி வையுங்கோ நிச்சயம் வறேன் " அவசியம் இல்லாமல் போன் செய்யமாட்டாள் ஸ்ரீதரின் மனைவி மாலை சரியாக ஆறுமணிக்கு போய் சேர்ந்தேன் . "என்னம்மா அவசரமா வர சொன்னாயே என்ன ஆச்சு ?" "உங்களுக்கு முதல்ல சாப்பிட என்ன வேணும் ?" விருந்தோம்பலில் மிகசிறந்தவள் ஸ்ரீதரின் மனைவி. "உன்னோட ஸ்பெஷல் அடை செய்யேன் ? அது சரி எதுக்கு கூப்பிட்ட ?" "ராம்ஜி உங்க பிரெண்டோட போக்கு கொஞ்ச நாளா சரியாவே இல்ல நீங்கதான் கொஞ்சம் எடுத்து சொல்லணும் " "ஏம்மா நல்லத்தான இருக்கான் நேத்திக்கு கூட என் கிட்டக்க பேசினானே ?" " ராத்திரி தூங்கறதே கிடையாது எப்ப பார்த்தாலும் படிச்சுண்டே இருக்கார் ..." "படிக்கறது ஒண்ணும் தப்பு இல்லையேம்மா ? ஏன்? அவன் TDR Times க்கு எழுதறத பத்தி சொல்றையா?" "அதை பத்தியே நான் சொல்லல........ , பிரச்னை என்னன்னா...என் பெரிய பொண்ணோட பிளஸ் ஒன் புஸ்தகத்த வெச்சிண

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

" உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?" இப்படி ஒருவர் திடீர் என்று உங்களை கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? என்னை கேட்டார் என்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு நண்பர். விஷயம் என்ன வென்றால் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கம் ஒரு இயக்குனரின் சகலை என் நண்பரின் கசின். அவர் தனியாக ஒரு படம் தயாரிப்பதாகவும், அவரே டைரக்டர் , ஹீரோ வாக செய்வதாகவும் மேலும் படத்தில் நடிக்க நடிகர்களை தேர்வு செய்வதாகவும் கூறினார். " சரி சங்கரன் நீங்க சொல்றத கேட்க ரொம்ப ஆசையா இருக்கு நாம எப்படி ஒர்கிங் டேஸ் ல நடிக்க முடியும் ?" "அதெல்லாம் இல்ல சார், நம்ம பார்ட் ஷூட்டிங் எல்லாமே சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை தான்.இப்ப ஓகேயா ?" எங்களை அவரின் கசினிடம் அழைத்து செல்வதாக கூறினார். எங்கள் அலுவலகத்தில் இருந்து நாங்கள் நான்கு பேர் தேர்வானோம். " ஒரு விஷயம் சார், இத அவரு ஒரு பரிசோதனை முயற்சில எடுக்கறாரு அதனால எல்லாரையும் அமைச்சூர் ஆக்டர்களா போடறார் . இதுல நீங்க எல்லாரும் பிரபலம் ஆகலாம். ஏன்னா அவங்க இதுக்கு முதல்ல ...... படங்கள எடுத்தவங்க " என்று அவர் ஒரு சில பிரப

தந்தி

Image
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் செய்த சகல குற்றங்களையும் எல்லோரும் மன்னிப்பார்களாக ---- எனக்கு இந்த காலையிலேயே ஸ்ரீதர் ஏன் என் வீட்டிற்கு வந்து "தந்தி குடுக்க போகணும் வரையா ?" என்று கூப்பிடுகிறான் என்று நான் ஆச்சர்ய பட்டேன். "ஏன் என்னடா ஆச்சு ?" ராஜராம ஐயர் சென்னையில் இருந்தார். அவரின் வயதான தாயாரும் அவரின் சகோதரியும் திருவிடைமருதூரில் தனியே இருந்தார்கள். இவர்களுக்கு care taker ஆக அருகில் இருந்த ஒரு சிலரும் குறிப்பாக குலபதி ஐயர் மற்றும் வாஞ்சிசார் அவர்களும் அப்போது இருந்தனர். குலபதி ஐயரிடம் தன்னுடைய சில முக்கிய தஸ்தாவேஜுகளை குடுத்து வைத்திருந்ததோடு ஒரு சில பணபரிமற்றங்களும் செய்து வந்தார். திருவிடைமருதூர் வந்தவுடன் குலபதி ஐயரை உடனே தேட ஆரம்பித்து விடுவார். ஒரு சில நேரங்களில் ஆலோசனைகளும் கேட்பார். இதனால் குலபதி ஐயர் வீட்டில் உருளை கிழங்கு பொடிமாஸ் செய்தால் கூட " பாரு ராஜ ராம ஐயர் காசு .." என்று வரது சேகர் போன்றவர்கள் கமென்ட் கொடுத்தார்கள்.. ராஜ ராம ஐயர் இரண்டு அல்லது மூன்றுமாதங்களுக்கு ஒருமுறையாவது தனது பிளைமூத் காரில் வந

சமய குறவர்கள்

Image
நடந்த வருடம் தோராயமாக 1978 - 79 நாங்கள் அனைவரும் ஹையர் செகன்ட்ரி முதல் பாச் முதல் வருடம். நடந்த இடம் வாஞ்சி சார் வீட்டு வாசல் திண்ணை. "டே பசங்களா உங்களுக்கெல்லாம் நல்ல சேதி? இந்தவருஷம் Plus 1 First Year முதல் செட்டுங்கறதுனால பரிஷ்சை எழுதின எல்லோரையும் MGR பாஸ் போட சொல்லிட்டார் தெரியுமோ !" இது எனக்கு தெரிந்து நான் நேரே கேட்டு வாஞ்சி சார் சொன்ன ஒரு நிஜமான செய்தி. "ஏன்டா ஸ்ரீதர் உங்க சித்தப்பா சொல்றது நிஜமாடா ?" என்றேன் "ராம்ஜி.. எங்க சித்தப்பா எப்பையாவது தப்பி தவறிப்போய் நிஜமும் சொல்வார் !" "இது நல்ல இருக்கே!!" "ஆமா இவன் மட்டும் ரொம்ப அரிச்சந்திரன், ராம்ஜி.. எங்க அப்பா எப்பையாவது தான்டா தவறுவார் !" என்றான் ரமேஷ் "இதுவும் நல்ல இருக்கு " " இத மீறி அவர கேட்டா 'வள்ளுவரே சொல்லி இருக்கார் பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின் ' ஒன்னும் தப்பில்ல அப்படிம்பார் ஆனா ஒன்னு ராம்ஜி .. அவர் சொல்றதால யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது." அவர் பாட்டுக்கு கோயில் திருக்குளம்

Tuition

எனக்கு டியுஷன் சொல்லிக்கொடுத்தவர்கள் சற்றே திரும்பி பார்க்கிறேன் எனக்கு தனி வகுப்பு எடுத்தவர்களை. வேடிக்கையாக உள்ளது இதனை பேரிடமா நான் படித்தேன்.? திருவாளர்கள் 1 / நாகேஸ்வர சாஸ்திரிகள்தான் அக்ஷராபியாசம் சொல்லிகொடுத்தார்கள். 2 / முதல் வகுப்பு படித்தபோது பீமா ராவ் . வயதானவர் .நான் ஒரு இடத்தில உட்காராமல் ஓடிக்கொண்டே இருந்ததால் என் இடுப்பில் ஒரு கயறு கட்டி அவர் கையில் கொடுத்திருந்தார்கள் அவரும் அதனை தன்னுடைய நாற்காலியில் கட்டி விட்டு எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார். விஷமம் செய்தால் அவரிடம் சொல்லி விடுவதாக என் அக்காக்கள் மிரட்டினர் . அனால் அவர் பரம சாது. 3 / நாராயணன் சார் . நீண்ட நகத்தை வைத்துக்கொண்டு கிள்ளுவார். ஒருமுறை எனக்கு கணக்கு சொல்லிகொடுத்தபோது அவர் போட்ட கணக்கிற்கு 100 க்கு 100 போட்டு வெறி குட் சார் என்றேன். நல்ல உதை கிடைத்தது. "நாளைக்கி டியுஷன் கிடையாது " " ஏன் சார் ?" "விஜயதசமி இல்லையா ? அதுனால. " "தினமும் விஜய தசமி இருந்தா நல்ல இருக்கும் இல்ல சார் ?" 4 / வாஞ்சி சார் ( நிச்சயம் பொய் பேச அவர் எனக்கு கற்றுத் தரவி