போஸ்ட்மேன் ராமசாமி
போஸ்ட்மேன் ராமசாமி ஐ திருவிடைமருதூரில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. சுமார் 55 வயது , உயர்ந்த உருவம் ஒல்லியான தேகம், கண்ணாடி கண்களில் எப்போதும் ஒரு கனிவு.
போஸ்ட் ஆபீஸ் போய் லெட்டர் வாங்கும் வழக்கம் என்பது எப்படி ஏற்பட்டது என்றால், அது ஒரு சிறிய கதை.
ஆறாவது என்று நினைக்கிறேன். முழு ஆண்டு தேர்வு முடிவுகள் போஸ்ட் கார்டில் அனுப்புவதாக ஏற்பாடகிஇருந்தது. எல்லோரும் 15 பைசா போஸ்ட் கார்டு வாங்கி பள்ளியில் கொடுத்திருந்தோம்.
அந்த கடிதத்தை எதிர் நோக்கி காத்திருந்ததால் தினமும் போஸ்ட் ஆபீஸ்க்கு காலையில் 7.45 க்கு எல்லோரும் போய் ராமசாமி வெளியில் வருவதற்காக காத்திருப்போம் .
பின்னாளில் அது அப்படியே தொடர்ந்தது வேலை கிடைக்கும் வரை.
ராமசாமி வெளியில் வரும்போதே ஒவ்வொருவர் முகத்தை பார்த்த மாத்திரத்திலேயே கூறிவிடுவார்.
" உனக்கு இன்னைக்கி இல்ல .."
" உனக்கு லெட்டர் எழுதிகிட்டு இருக்காங்க ... "
" நீங்க நாளைக்கி வரலாம் .."
என்று கூறுவர்.
ஒரு கூட்டம் அவரை சுற்றி நிற்கும் . நானும் எல்லோரையும் விலக்கிக்கொண்டு கால்களுக்கு இடையில் கழுத்தை மட்டும் நீட்டி
"ராமசாமி எனக்கு இருக்கா ?" என்று கேட்டால்
" இங்க வா .." என்று கூறி அவர் கை என் டிராயரை நோக்கி நீளும் . நான் ஓடுவேன். சிரித்துக்கொண்டே " இந்தா இந்த கடுதாசியை வாங்கிக்கொண்டு போ " என கூறுவர்.
ரிசல்ட் வரும் நாளுக்காக காத்திருந்தேன் .
" இந்தா தம்பி நீ கேட்ட கடுதாசி வந்திருக்கு " என்று கூறி நான் ஆவலுடன் எதிர் பார்த்த அந்த போஸ்ட் கார்டு ஐ என்னிடம் கொடுத்தார்.
Promoted என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தி இருந்தது.மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது. அந்த கடிதத்தை இருகைகளாலும் இறுக பிடித்தபடி ஓடினேன் .
" ஏய் ரிசல்ட்ட காட்டு" என்று கேட்டவர்களிடம் காட்டாமல் மேலும் இறுக்கமாக நெஞ்சில் அணைத்தபடி வீட்டிற்கு ஓடினேன்.
" ஆறாவது பாஸ் செஞ்சாச்சு, பெரிய கிளாஸ் போயாச்சு , இன்னமே அம்மா பக்கத்துல படுதுப்பேன் அப்படிங்க கூடாது, ரேஷன் கடைக்கு எல்லாம் போய் சாமான் வாங்கிண்டு வரணும், அம்மா எதாவது வாங்கிண்டு வரசொன்னா நாலு கடைல விலை விசாரிக்கணும், கரண்ட் பில் கட்டிட்டு வரணும் ...." என்று பெரியப்பா அடிக்கிக்கொண்டே போக
" பெரியப்பா பேசாம நான் பெயில் ஆகி இருக்கலாம் .." என்று கூறினேன். பின்ன என்ன ஒரு பெரிய குடும்ப பொறுப்பையே என்னிடம் கொடுத்தால்.?
இந்த ஸ்ரீதருக்கு விஷமத்தனம் அதிகம். ஒருமுறை தினத்தந்தி பேப்பரை எட்டாக மடித்து நடுவில் ஒரு வெள்ளை பேப்பரை ஒட்டி அதில் புக் போஸ்ட் என்று எழுதி ஸ்டாம்ப் ஒட்டாமல் ரமேஷின் முகவரிக்கு அனுப்பிவிட்டான்.
" வாஞ்சி சார் உங்க பிள்ளைக்கு புக் போஸ்ட் வந்திருக்கு ஸ்டாம்ப் ஓட்டமா , டியு 60 பைசா கட்டனும் "
ரமேஷின் அம்மாவோ பிள்ளைக்கி வேலைக்கி ஆர்டர் வந்திருப்பதாக நினைத்து டியு கட்டி வாங்கினாள்.
" எவண்டா அது எனக்கு ஸ்டாம்ப் ஓட்டமா புக் போஸ்ட் அனுபினது?" என்று சைக்கிள் செயினை கையில் சற்றி கூச்சல் போட்டான் ரமேஷ்.
அன்று முதல் அவர் "செயின் ஜெயபால்" என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
ரமேஷும் தன் பங்கிற்கு அதே போல் ஒரு புக் போஸ்ட் ரெடி செய்து ஸ்ரீதருக்கு அனுப்ப அதனை ஸ்ரீதரின் தந்தை பார்த்து விட்டு
" ராமசாமி இத அனுப்பினது யாருன்னு தெரியும் இங்க குடு " என்று கூறி அதனை ரமேஷுக்கே ரீ டைரக்ட் செய்துவிட மீண்டும் ரமேஷின் தாய் அதனை டியு கட்டிவாங்கினார் ஆனால் இந்த முறை 90 பைசா.
" வாஞ்சி சார் பிள்ளைங்களை கொஞ்சம் கண்டிச்சி வையிங்க விளையாடுத்தனமா இருக்காங்க "
" ராமசாமி இவனாலையே என் சம்பளம் முழுக்க டியு கட்டியே செலவாயிடும் போலிருக்கு அடுத்தவாட்டி இதமாதிரி வந்தா ரெண்டு பயலையும் பிடிச்சிண்டு போய்டு " என்றார்.
மகாதானதெருவின் வடக்கு பகுதியில் கணவனை இழந்த வயதான பெண்கள் இருந்தார்கள் . அவர்களுக்கு எல்லாம் ராமசாமியின் வருகை ஒரு புது உலகத்தை காட்டும். ராமசாமி தரும் கடிதங்களுக்காக வாசலிலேயே இருப்பார்கள்.
ராமசாமியின் வேலை கடிதம் கொடுப்பது மட்டும் அல்ல அவர்கர்களுக்கு பதில் கடிதமும் எழுதி தரவேண்டும்.
பிரதி பலனாக அவர்கள் வீட்டில் தரும் பழையதோ, மோரோ வங்கி குடித்துவிட்டு தொடர்வார்.
"ராமசாமி திரும்பி வரும்போது வரயா பிள்ளைக்கி கடுதாசி போடணும்"
" சரி பாட்டிம்மா கொஞ்சம் மோர் கொடுங்க
ராமசாமி திரும்பி வரும்போது மறக்காமல் வந்தார்.
"சொல்லுங்க என்ன எழுதணும் ?"
"பையன் காசு அனுப்ப ரொம்ப லேட் ஆகிறது செலவுக்கு பணம் வேணும் அப்படின்னு கேட்டா தரமாட்டன்.வேணுங்கறது எல்லாம் இருக்கு .எனக்கு உடம்பு சரியில்லனு எழுது.."
"ராமசாமி திரும்பி வரும்போது வரயா பிள்ளைக்கி கடுதாசி போடணும்"
" சரி பாட்டிம்மா கொஞ்சம் மோர் கொடுங்க
ராமசாமி திரும்பி வரும்போது மறக்காமல் வந்தார்.
"சொல்லுங்க என்ன எழுதணும் ?"
"பையன் காசு அனுப்ப ரொம்ப லேட் ஆகிறது செலவுக்கு பணம் வேணும் அப்படின்னு கேட்டா தரமாட்டன்.
ராமசாமி சிரித்துக்கொண்டே "சொல்லுங்க "
"ஜெயராமா சௌக்கியமா, இப்பவும் எனக்கு உடம்பு சரியில்ல வாஞ்சி கைய பிடிச்சி பாத்துட்டு எனக்கு 150 டிகிரி ஜுரம் அடிகரதுன்னான்..."
"ஜெயராமா சௌக்கியமா, இப்பவும் எனக்கு உடம்பு சரியில்ல வாஞ்சி கைய பிடிச்சி பாத்துட்டு எனக்கு 150 டிகிரி ஜுரம் அடிகரதுன்னான்..."
"பாட்டிம்மா 150 டிகிரி ஜுரம் வந்தா நீங்க இருக்க மாட்டிங்க எப்பயோ போயருப்பிங்க .. கொஞ்சம் பொறுத்தமா சொல்லுங்க ..மெட்ராஸ் வெயில விட ஜாஸ்தியால்ல சொல்றிங்க ..""
"சரி ஒரு பத்தோ இருபதோ கொறசிக்கோ .."
"சரி ஒரு பத்தோ இருபதோ கொறசிக்கோ .."
பதில் கடிதம் வந்தது
" ... நீ சுந்தரம் டாக்டரிடம் உடம்பை காட்டிக்கொள்ளவும் நான் வரும்போது அவருக்கு செட்டில் செய்து விடுகிறேன் .பின்னால் காய்த்திருந்த பலாபழத்தை எழுத்த வீட்டு வானரங்கள் எடுக்கவில்லையே .. ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவும் .."
ராமசாமி இவற்றை கண்டு ரசித்தாலும் அவர்களுக்கு அனுசரணையாக இருந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்தார்.
எனக்கு எப்போதுமே அவர் மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது .
எல்லோரிடமும் பழகும் விதம் அப்படி.
ராமசாமி கடிதம் கொடுக்க சைக்கிளில் போகும்போது நானும் கூடவே ஓடி பக்கவாட்டில் சென்று " குட் மார்னிங் ராமசாமி .." என்று ஒருமையில் மூச்சிரைக்க சொன்னாலும் சிரித்துக்கொண்டே "குட் மார்னிங் ஓடி வராத கீழ விழுந்திடுவ .."

லட்சுமி பாட்டியின் வீட்டை நெருங்க
"ஏன்டா ராமசாமி எதாவது மணி ஆர்டர் வந்ததா? ஒடம்பு முடியலடா ..? மூச்சு இறைக்கிறது .. எத்தனை நாளைக்கி வெறும் மோரும் சாதமும் நார்தங்காயும் சாப்பிடறது..."
என்று இருமிக்கொண்டே ஆயாசமாக சாய ராமசாமி ரொம்ப வேதனை பட்டார்.

"பாட்டி நான் இன்னொரு ட்ரிப் வருவேன் அப்பத்தான் மணி ஆர்டர் கொண்டு வருவேன் கவலை படாதிங்க அதுல நிச்சயம் வந்திருக்கும் .." என்று ஆறுதல் கூறி போனார்.
அது ஒரு விடுமுறை நாள் ஆனதால் நான் விளையாட மண்டபம் அருகில் செல்ல அங்கே மண்டபத்தின் நிழலில் சற்றே களைப்பாக ராமசாமி அமர்ந்திருந்தார் .
நான் விளையாடிகொண்டே அவர் அறியாமல் அவர் பின்னால் போய் அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன் . ஒரு மணி ஆர்டர் பாரம் எழுதிக்கொண்டிருந்தார் . ..' லட்சுமி அம்மாள் , மகாதான தெரு ...என்று சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து அவர் புறப்பட ஆர்வம் தாங்காமல் நானும் பின்னாலேயே சென்றேன்
சைக்கிள் லட்சுமி பாட்டியின் வீட்டை அடைந்தது
"பாட்டிம்மா பாட்டிம்மா ... நீங்க கேட்ட மணி ஆர்டர் வந்திருக்கு வாங்க கைஎழுத்து போடுங்க ..."

"...."
"பாட்டிம்மா பாட்டிம்மா .."
"................."
ராமசாமி வெளியில் வந்து அருகில் இருந்த நாச்சாமி ஐயரை கூப்பிட
அவரும் உள்ளே சென்று பார்த்து விட்டு வெளியில் வந்தார் ...
"ராமசாமி இன்னமே அவளுக்கு மணி ஆர்டர் தேவை இல்லடா..அவ போய் சேந்து அரைமணி ஆறது..."
அவரும் உள்ளே சென்று பார்த்து விட்டு வெளியில் வந்தார் ...
"ராமசாமி இன்னமே அவளுக்கு மணி ஆர்டர் தேவை இல்லடா..அவ போய் சேந்து அரைமணி ஆறது..."
துணுக்குற்றேன் ..
ராமசாமியும் உள்ளே சென்று பார்த்து விட்டு வெளியில் வந்தார்.
"அய்யா இந்தாங்க இது அவங்க பணம் அவங்க காரியத்துக்கு உபயோக படித்துக்கங்க .. என்று தன் சட்டை பையில் தனியே வைத்திருந்த நூறு ரூபாயை தர
ராமசாமியின் கண்களின் ஓரத்தில் முதன் முறையாக சற்றே ஒரு நீர் முத்தை பார்த்தேன் ..

ராமசாமி என்றும் என்மனதில் ஹீரோதான்
Comments
Post a Comment