நவராத்திரி

எப்போதும் போல் மாலை ரகு வீட்டின் கிணற்றை சுற்றி உட்கார , ரகு தலைமை தாங்கினான். புரட்டாசி என்றாலே படிக்காமல் இருப்பதற்கும் பொழுது போவதற்கும் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன .

" டேய் , இன்னைக்கி engineer ஆத்துல பட்டாணி சுண்டல் சூப்பரா இருக்கும் , சரியாய் 6.45 க்கு எல்லார் வீட்டுக்கும் போறோம் என்ன சரியா?"  என்றான்.

நான் சரி என்றேன் .  

" நீ எங்க வற ?  உன்ன யாரு கூப்பிட்டா? " என்றான் 
" எண்டா? " என்றேன்
" நீ அப்புறம் அம்மா வெய்வா , அப்பா அடிப்பா அப்படிம்ப, உன்ன அழைசிண்டு போன எங்க அம்மாவும் " ஏன்டா அவன கெடுக்கற ?" அப்படிம்பா இதெல்லாம் எனக்கு தேவையா? " என்றான்.
" இல்லடா please நானும் வரேண்டா " என்று கெஞ்சினேன் .
"வந்துட்டு போகட்டும்டா " என்று பாஸ்கர், ரமேஷ்  போன்ற தளபதிகளும் ஒப்புதல் தர கூட வரசொன்னான்.

சரியாய் 6.45 க்கு எல்லோரும் ஆஜர் ஆனோம், ரகு என்னை கூப்பிட்டான் . இந்த இந்த மஞ்ச பையை பிடி என்று கொடுத்தான். 
"இது எதுக்கு " என்றேன்.  
" எல்லா ராத்துல     வாங்கற சுண்டலையும் இதுல போட்டுக்கணும் கடைசியா பஜனை மடத்துல ஒக்காந்துண்டு சாப்பிடனும் "என்றான்.

கூட்டம் அமோதித்து. 

ஒவ்வொரு வீட்ட்ரிக்கு போகும்போதும் " அம்மாமி சுண்டல்" என்று கோஷம் போடசொன்னான் .
எனக்கு வெட்கமாக இருந்தது.  கோஷம் போடவில்லை என்றால் அங்கேயே விட்டு விட்டு போய்விடுவார்கள். அதனால் நானும் அவர்களின் வீட்டில் இருட்டான ரேழியில் கோஷம் போடுவேன். 
போக போக ஜாலியாக இருந்தது.   பின்னாளில் பகலில் தனியாக இருக்கும் போது சொல்லி பார்த்துக்கொள்வேன். 

மகாதான தெருவில் டாக்டர் வீடு , engineer வீடு , மேட்டூர் வீடு, தங்கம் பேங்க் வீடு, கொலுவுக்கு famous.
ஒருநாள்  engineer  வீட்டுக்கு     கும்பலாக போனோம், கோஷம் போட்டோம். சிறிது நேரத்தில்  என்னை தவிர எல்லோரும் ஓடிவிட்டார்கள்.  நான் என்ன என்று பார்த்து  என் செருப்பை தேடினேன் . குனியும் நேரத்தில் கிட்டு அவர்கள் தன்  walking stick ஆல் என் பின்னால் ஒரு போடு போட்டார்.  நான் ஒரு கையில் சுண்டல் பையும் இன்னொரு கையில் செருப்பையும் தூக்கிக்கொண்டு ஓடினேன்.  
நான் ஓடிவருவதை பார்த்து ரகு என்ன என்றான் .  பாஸ்கர் என் கையிலிருந்த சுண்டலை வாங்கி பதிரபடுதினான். 

பின்னர்தான் தெரிந்தது, எங்களை போல் மற்றொரு கும்பல் கோஷம் போட்டபடி முதல் நாள் வந்திருக்கிறது, அவர்கள் சுண்டல் குறைவாக தந்தார்கள் என்பதனால்  engineer வீட்டு மெயின் சுவிட்ச் ஐ ஆப் செய்ததோடு இல்லாமல் , இரண்டு ஜோடி செருப்புகளையும் தூக்கி போய்விட்டார்கள் என்பது தெறிந்தது.

" போடா ரகு நல்லா அட்டிச்சிட்டார்டா " என்று கூற, கொஞ்சம் கொண்டகடலை கொடுத்து சாப்பிட சொல்லி பின்னால் தடவி கொடுத்தான். கூடவே " உங்காத்துல சொல்லாத " என்றான்

எங்கள் வீடு கூட்டுகுடும்பம். என் அக்கா ராஜி என்னை தன்னுடன் சேர்க்க மாட்டாள் 
" காது அறுந்துடும் " என்று பயமுறுத்துவாள்.  பெரியப்பா பெண் கண்ணம்மாதான்   கூப்பிட்டு போவாள்.

கொலு கூப்பிட போனார்கள்.  நானும் வருவேன் என்று கூற வழக்கம் போல் ராஜி மறுத்தாள் .  ஆனால் கண்ணம்மாவோ      " சரி வா ஆனா ஒரு கண்டிஷன் " என்று கூறினாள்.
" பாதில நடக்க முடியல என்று கூறக்கூடாது. மேலும் வீட்டுக்கு போகலாம் என்று அவசரபடுதகூடது " என்றும் கூறினாள்   மேலும் ரகு கொடுத்து போல் ஒரு மஞ்சள் பையை  என்னிடம் கொடுத்து  போகுமிடங்களில் கொடுக்கும் தாம்பூலங்களை     சேர்த்து வைத்துக்கொள்ள சொன்னாள்.   ரகுவிற்கும் இவர்களுக்கும் அப்படி ஒன்றும் வித்யாசம் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்.     அதற்காக ஒப்புக்கொண்டேன்.

அவர்கள் நடக்க நான் அவர்களின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடினேன்.  என்னை தர தர வென்று இழுத்து சென்றாகள். 

டாக்டர் வீட்டுக்குள் போகும்போது இருட்டை பார்த்தும் " அம்மாமி சுண்டல் " என்று நான் கோஷம் போட   கண்ணம்மா என் கன்னத்தை கிள்ளினாள்.  

"நான் அப்பவே சொன்னேன் மானத்த வாங்கறான் பாரு ."- என்றாள் ராஜி. 

"இதபாரு இதெல்லாம் ரகுவோட வெச்சிக்கோ எங்க கூட வரும்போதும் இதெல்லாம் சொல்லக்கூடாது என்று கூறினாள்.

ஸ்ரீ சக்ர ராஜ ... பாடினார்கள்,      துன்பபுடத்தில் இட்டு பாடும்போது பிசிறு தட்டும் என்பதால் அந்த பாராவை     விட்டு விட்டு பாடினார்கள்.  ஆனால் டாக்டரின் மனைவி நல்ல   சங்கீதம் தெரிந்தவர் என்பதால் அந்த பாராவை  விடாமல் பாடசொல்லி அப்புறம் தான் சுண்டல் தந்தார்கள்.  

எனக்கு இந்த process  கொஞ்சம் கஷ்டமாக இருந்தது . போனோமா " அம்மாமி சுண்டல் என்று கோஷம் போட்டோமா? சுண்டலை வாங்கினோமா என்று இல்லாமல்..  ரொம்பவே நெளிந்தேன். ரகு இந்நேரம் எட்டு வீட்டை முடித்திருப்பான். என்று கணக்கு போட்டேன்.
 
"என்னங்க ....?

(என் மனைவி கூப்பிடுகிறாள் என்ன என்று கேட்டுவிட்டு வருகிறேன்.)

" என்ன ..?"

" வாங்க போகலாம் ஞாபகம் இல்லையா என் பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போகணும் கொலுவுக்கு கூப்பிட்டுஇருக்காங்க .அப்படியே நாமளும் நாலு பேர் வீட்டுக்கு போயி கூப்பிட்டுட்டு வருவோம்  " என்றாள்.

(சரி நான் போய்விட்டு வருகிறேன் அடுத்த மெயிலில் விவரம் கூறுகிறேன். )

வண்டியை ஸ்டார்ட் செய்தேன் 

" இந்தாங்க இதபிடிங்க "   என்றாள்.

அவள் என் கையில் கொடுத்து ஒரு மஞ்சள் பை ..!!!!

Comments

Popular posts from this blog

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

Short story

ஸ்கூலுக்கு நேரமாச்சு