நெஞ்சம் மட்டுமல்ல நினைவும் மறப்பதில்லை
நெஞ்சம் மட்டுமல்ல நினைவும் மறப்பதில்லை - உங்களுக்கும்தானே.
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோமே !
நம்மால் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நிச்சயம் இருக்கும். சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று ஆசை பட்டேன். நீங்களும் உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளலாம்.
(யாருடைய மனதும் புண்படாமல் என்பது Request)
இங்கே என் பள்ளி நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை கட்டுரை வடிவில் தந்துள்ளேன்.
மறக்க முடியுமா TAHSS school ஐ !!!

திருவிடைமருதூர் பள்ளியில் சிங்கிநீர் குளம் அருகில் ஒரு மேடு உண்டு அதில் NCC துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். அதை பார்க்கும் போது எனக்கும் அதில் சேர்ந்து துப்பாக்கியை தூக்கி சுடவேண்டும் என்ற ஆசை மேற்பட்டது அதனை காட்டிலும் NCC பரேடில் பூரி தருவார்கள் என்ற கொசுறு செய்தியை ஜானகிராமன் கூற நாக்கில் நீர் ஊறியது. இதில் சேர என்ன செய்ய வேண்டும் என்று அவனை கேட்க பேபி சாரை பார்க்க சொன்னான்.
நானும் அவரை பார்க்க ஆசிரியர்கள் இருக்கும் அறைக்கு சென்று கேட்டேன் அதற்கு அவர் உனக்கு " எதற்குடா இந்த விபரீத ஆசை ? " என்றார். ஏன் என்றல் அப்போது நான் பறவை காய்ச்சல், சிக்கன் குனியா, மற்றும் பன்றிக்காயச்சல் மூன்றும் சேர்ந்து வந்து அடிவாங்கிய சோமாலிய பையன் போல் ஒல்லியாக இருப்பேன். விஸ்வநாதன் சார் கூட ஒருமுறை " ஏன்டா பிரகஸ்பதி லேப் ராகவன் கிட்டக்க இருந்த ஒரு எலும்புகூடு ஒடஞ்சி போச்சாம் நாளைக்கி வேற ஆடிட்டாம் நீபோய் அந்த இடத்துல இருந்து கணக்கா காட்டிட்டு வாயேன் " என்று மிகை படுத்துவார்.
இந்த நிலையில் பேபி சார் கேட்டது நியாயமாக பட்டாலும் நீண்ட முயற்சிக்கு பிறகு சண்டே பேறேடுக்கு வா என்றார்.
எனது ஆசை நிறைவேற போகும் அந்த நாளை எதிர் நோக்கி காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது.
காலையிலேயே மகேந்திரன் தலைமையில் left right போட்டுகொண்டிருந்தார்கள். என்னை ஒரு ஓரமாய் நிற்க சொன்னான். மகேந்திரா, மகேந்திரா என்று இரண்டு முறை கூப்பிட " இதபார் கிளாஸ்லதான் நான் மகேந்திரன் இங்க நான் சார்ஜன்ட் என்று புறங்கை கட்டிக்கொண்டு தங்கபதக்கம் சிவாஜி போல் கர்ஜித்தான்.
என்னை ஜானகிராமன் பிரசவம் முடிந்து வார்டிற்கு அழைத்து செல்லப்படும் பெண் போல் கைத்தாங்கலாக அழைத்து சென்று அவனுடன் உட்கார சொன்னான். அப்போதுதான் பார்த்தேன் ஜானகிராமனுக்கு புஸ்தக மூட்டையை பார்த்துக்கொள்வது டிபன் பரிமாறுவதுதான் வேலை என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அதனை மிகவும் பொறுப்புடன் பார்த்துக்கொண்டான் . என்ன அப்போதுக்கு அப்போது சாப்பாட்டு இலையை தூக்கி மசாலாவின் வாசனையை பார்த்து வந்தான். எட்டி பார்த்த என்னை விரட்டினான்.
பின்னர் அங்கு வந்த மகேந்திரன் எனக்கு uniform தருமாறு ஜானகிராமனை பணிந்தான். பேபி சார் அன்று வரவில்லை என்றும் மகேந்திரன் தான் parade நடத்துவதாகவும் அறிந்தேன்.
ஜானகிராமனும் எனக்கு ஒரு அரைக்கால் டிராயரு ம் சட்டை பெல்ட் தொப்பி கொடுத்து போட்டுக்கொள்ள சொன்னான்.
pant பேபி சார் கு தைத்தது போல் மிக பெரிதாக இருந்தது. அதில் நான் ஜானகிராமன் இருவருமே போகலாம் போல் இருந்தது. ஒரு கையால் அதனை பிடித்துக்கொண்டே இருந்தேன் நான் போட்டுகொண்டிருந்த டிராயர் மேல் போட்டுகொண்டாலும் பெரிதாக இருந்தது.
பின்னர் ஜானகிராமனை என்ன செய்வது என கேட்க எங்கிருந்தோ ஒரு சனல் கொண்டு வந்து கொடுத்து கட்டிக்கொள்ள சொன்னான். " அடேய் ஆபத் பந்தாவா எதுடா சனல் என்றேன்? "
மூணு வருஷமா அப்டித்தான் தான் கட்டிகொள்வதாக சட்டையை தூக்கி காட்டினான்.
ஷூ வை பற்றி சொல்லவேண்டாம் பிரம்மாண்டம் மற்றும் மிகவும் கனமாக இருந்தது.
என்னால் நடக்கவே முடியவில்லை. நடக்க முயன்றால் உடல் போகிறதே தவிர கால்கள் எழவில்லை.
எல்லோரும் parade முடிந்தபிறகு கை கால் அலம்ப சென்றவுடன் எனக்கும் ஜானகிராமனுக்கும் தனியாக ஒப்புக்கு left right போடா சொல்லி சப்தம் போட்டான் மகேந்திரன் . அபௌட் டேர்ன் என்று கத்தின கத்தலில் என்ன ஆனது என்றே தெரியவில்லை வேப்பத்தூர் சேகர் முகத்தில் தண்ணீர் தெளித்தான். ஒருமாதிரி புறிந்தது.
" என்ன ஐயரே காலைலே என்ன துன்ன?" என்று கேட்டான். "மோருஞ்சாம் " என்றேன் . "மோருஞ் சாததுக்கு ஒரு left ஒரு right வந்ததே பெருசு உனக்கு எதுக்கு இந்த அபௌட் டேர்ன் எல்லாம் " என்று " நான் ஜானகிராமனை கொண்டு விட சொல்றேன் பூரிய சாப்டுட்டு போய் சேறு" என்றான். ( சேகர் தற்போது Tamil Nadu Police ல் Asst.Commissionair ஆக சென்னையில் இருப்பதாய் அறிந்தேன்)
ஜானகிராமனும் ஒரு சைக்கிள் உடன் கொரங்கு பெடல் போட்டபடி வந்தான் .
" உட்காரு போலாம்" என்றான் . அவனை நம்பி போவதை விட பேபி சாரிடம் அடிவாங்குவதே மேல் என்று பட்டாலும் அவன் விடுவதாய் இல்லை.
பழைய வெஸ்பா ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வது போல் சாய்ந்து நிற்க என்னை பின்னல் உட்கார சொன்னான். உட்கார்ந்தவுடன் தபக் தபக் என்று தத்தி தத்தி ஓட்டினான். என்னுடைய ஒருகை சீட்டை பிடித்திருந்தாலும் உயிர் இருந்தது என்னவோ இன்னொரு கையில் . அப்போது எல்லாம் front வீல் பிரேக் உடன் ஒரு பெல் இணைத்திருப்பார்கள் அதனை பிடித்தால் கிர்ரிங் என்று சப்தத்துடன் சைக்கிள் போகும்.
ஜானகிராமன் அந்த front wheel break உடன் இணைந்த பெல்லை பிடித்தபடி ஓட்ட எனக்கு ஆம்புலன்சில் செல்வதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. அவன் ஓட்டும்போது குனியாத வளையாத என்று என்னை அடிக்கடி சொல்ல சொன்னான். ஏன் என்று கேட்க " அம்பி அப்படித்தானே சொல்லிகொடுத்தான் " என்றான் . இதனை விட அவன் அப்போதுதான் முதன் முதலில் தனியாக சைக்கிள் ஓட்டுவதாகவும் டபிள்ஸ் ம் அதுதான் முதன் முறை என்றும் வீடு போய் சேர்ந்தவுடன் சொன்னான் . என்னை உடனே வீட்டுக்கு அழைத்து செல்லாமல் நாலு மடவிளாகம் நாலு மாட வீதி சுற்றி அழைத்து சென்றதன் பொருள் அப்போதுதான் புறிந்தது.
ஜானகிராமன் எனக்கு சைக்கிள் கற்றுதறுவதாகவும் NCC சேர வில்லையே என கவலை படவேண்டாம் என்றும் ஆறுதல் கூறி அடுத்த வாரம் school ground வரச்சொல்லி சென்றான்.
(பூரி கிடையாதாம்).
பார்க்கலாம்..........

Comments
Post a Comment