ஆவியுடன் பேசமுடியும் ?
இந்த வாரம் என் குடும்பதினரை பார்க்க பாண்டிச்சேரி போயிருந்தேன் . என்பையன் pendrive ல் ஒரு ஆங்கிலப்படத்தை போட்டு TV ல் காட்டினான். அது ஒரு பேய் படம். நன்றாக இருந்தது.
ஆவியுடன் பேசமுடியும் என்று அந்த நாளில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பற்றி என் பையனிடம் கூறினேன்.
சிறுவயதில் புதுக்கோட்டை பாட்டி வீட்டுக்கு கோடை விடுமுறையில் போயிருந்தபோது டெல்லியிலிருந்து வந்திருந்த ராஜி அத்தைதான் அந்த ஆச்சர்யமான விஷயத்தை கூறினாள்.
அதாவது தான் தினமும் ஆவிகளுடன் பேசுவதாகவும் பல விஷயங்கள் தெறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினாள்.
தன்னிடம் அவரின் லட்சுமி பாட்டி அடிக்கடி வந்து பேசுவதாகவும் , தவலை வடை எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்ததாகவும் டகால் அடித்தாள். அதை ஒரு கூட்டம் மெய் மறந்து கேட்டது.
ஒரு சதுரமான கட்டம் போட்டு அதனை சுற்றி a,b,c,d.. மற்றும் 1,2,3,..9,0 வரை எழுதினாள் . நடுவில் ஒரு ஓரத்தில் Yes என்றும் மற்றொரு ஓரத்தில் No என்றும் எழுதி நடுவில் ஒரு சிறிய வட்டம் போட்டு அதில் ஓம் எழுதி ஒரு சூடம் ஏற்றி அது அணையும் முன் ஒரு டம்ப்ளரை அதன் மேல் கவிழ்த்தாள். குறைந்தது இருநபராவது தங்களது ஆட்காட்டி விரலை அதன் மேல் வைக்க சொல்லி,சொன்னாள்.
ராஜி அத்தை, பெரியம்மா , பாட்டி என்று மூவரும் பிடித்துக்கொள்ள
"ஆவியே வா, ஆவியே வா" என்று மூன்று முறை கூற , டம்பளர் அப்டியே நகர்த்து "Yes" என்று அட்டன்டன்ஸ் கொடுத்தது.
"வந்திருக்கறது யாரு?" என்றாள் அத்தை.
"K I T T A" என்று ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்தது.
சின்ன தாத்தா "அடியே கிட்டா மாமா வந்திருக்காண்டி " என்று கூச்சல் போட அத்தை "உஷ் " என்று இடது கையை காட்டினாள்.
கிட்டா மாமா என்பவர் எங்கள் பாட்டியின் சித்தப்பா பிள்ளை . திருமாணம் செய்து கொள்ளவில்லை . நாட்டுவைத்தியம் , குறி சொல்வது , கட்டிலுக்கு நாடா பின்னுவது என்று என்னமோ செய்து கொண்டிருந்தார். திருமணமானபோது பாட்டியுடனே வந்து இலவச இணைப்பாக ஒட்டிக்கொண்டார். நல்ல மனிதர் . வீட்டில் எல்லாவேலையும் செய்வார். என்ன கொஞ்சம் புருடா விடுவார்.
"ராஜாஜி கிட்டக்க இருந்து நான் போட்ட கடுதாசிக்கு பதில் வந்திருக்கு பாக்கறயா?"என்று ஒரு கடிதத்தை காட்டுவார். அது ராஜாஜியுனுடயதுதான் என்பதை அப்டியே நம்பினோம் . யார் பார்த்திருக்கிறார்கள் ராஜாஜியின் கையெழுத்தை.
அந்த கிட்டா மாமா வந்தது ஆச்சர்யமாக இருந்தது .
"ஏண்டி உன்தம்பி மேல போனபிறகும் இந்த ஆத்துலேயே இருக்கானா ? இந்த ஆத்து சாப்பாடு அப்படி " என்று சின்ன தாத்தா கமென்ட் அடித்தார்.
"கிட்டா சௌக்யமா ?" என்று அபத்தமாக பாட்டி கேள்வி எழுப்பினார்.
"Yes" என்றார் கிட்டா
"ஊருக்கு எப்போது நாங்கள் போவது " என்று அத்தை கேட்க
" N E X T W E E K " என்று வந்தது . அத்தையின் ஆசை அதுதான்.
அத்தையின் கை வேகமாக இழுப்பதை பார்த்தேன் . மாமா தங்களது டெல்லி பயணத்தை வேறு வழி இல்லாமல் ஒத்திப்போட்டார்.
சுமார் ஒருமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கடைசியாக தாத்தா " ஏன்டா கிட்டா வேம்பு கடைல பொடி பாக்கி ரெண்டு ரூபா நீ தரனுமாமே உண்மையா ?" என்று கேட்க
டம்பளர் நகரவே இல்லை.
"கிட்டா மாமா கோச்சிண்டு போயிட்டார்" என்று அத்தை விளக்கம் அளித்தார்.
" அவன் எங்க போவான் கரக்டா 3 மணிக்கு உங்க பாட்டி பஜ்ஜி போடும்போது வந்துடுவான் . நீ வேணா அப்பா ட்ரை பண்ணு..Useless fellow, கடன் பாக்கிய பத்தி கேட்டா ஓடிபோயடறான் "
தத்தா வுக்கு இந்த மூட நம்பிக்கைகள் பிடிக்காது. அப்போதே முற்போக்குவாதி.
பின்னர் அடிக்கடி கிட்டா வுடன் பேசினார்கள் . ஏன் மற்ற ஆவிகள் வரவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இந்த செய்தி தெரு முழுக்க பரவி இதனை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே திரண்டது.
அத்தையை பார்த்து எல்லோரும் சற்று பயந்தார்கள் . அத்தை இதனை தனக்கு சாதகமாக செய்துகொண்டதை என்னால் உணர முடிந்தது.
இந்த நிகழ்ச்சியை பற்றி என் பையனிடம் கூற அவனும் இதனை நாம் மீண்டும் முயற்சிக்கலாமே என்று என்னையும் என் அக்காவையும் compel செய்தான்.
நானும் என் அக்காவும் இதனை செய்ய முற்பட்டோம் .
சூடம் கொழுத்தி டம்பளரின் மேல் கைவைக்க டம்பளர் நகர்ந்தது.
ஏகப்பட்ட எழுத்துக்கள் வந்தது . சேர்த்து படித்து பார்த்தோம்
" குப்தர்கள் காலம் பொற்காலம் ஏன்?"
தூக்கி வாரிபோட்டது . படிக்கும்போது சரித்திரத்தில் 3 mark வாங்கி சரித்திரம் படைத்தவன் நான். பயந்தேன் .
" who is this ?" என்றேன்
பதில் வந்தது டம்ப்ளரை தூக்கி போட்டுவிட்டு ஓடிபோயவிட்டேன்.
"ஏன்டா ராம்ஜி , ஆவியோட பேசினத பத்தி சொன்னயே, யாருடா வந்தது ? " என்று ஷீலா போன் செய்து விசாரித்தாள்.
சொன்னேன் ...............
"Baby sir...."

Comments
Post a Comment