குருகுல வாசம்
ராஜம் சார் --
நன்றாக படிக்கவேண்டும் என்று தங்கள் பிள்ளைகளை ராஜம் சாரிடம் சேர்பவர்கள் ஒருவகை.
மலர், கணேஷ், வெங்குட்டு போன்றவர்கள்
நல்ல படிப்புடன் நல்ல ஒழுக்கம் வரவேண்டும் என்று சேர்பவர்கள் இன்னொருவகை
ராகவன், வேப்பங்கொட்டை என்ங்கிற மாரிமுத்து போன்றவர்கள்
வெளியில் செய்யும் விஷமங்களுக்கு வெறும் தண்டனைக்கு மட்டுமே கொண்டுவந்து விடுபவர்கள் மற்றொருவகை
இதில் மூன்றாவது வகையில் அடிக்கடி வந்து போவது பெரும்பாலும் ஸ்ரீதர்.
சுமார் நாற்பது பேர் படித்தோம் டூஷனில் . இதில் தூங்குவதை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அங்கேயே இருந்தவர்கள் ஒருசிலர் உண்டு. சங்கர் அந்த வகை.
சார் மிகவும் கண்டிப்பானவர். இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் நான் மிகவும் ஆசைப்பட்டு அங்கே போய் சேர்ந்தேன். அங்கே படித்தவர்கள் நன்றாக படித்தார்கள் - மலர்கொடி, சரஸ்வதி, கிரிஜாபாய் , மீரா பாய் , விஜி, உமா , கணேஷ் ,வெங்குட்டு -தற்போது சூரத் ராம்ஜி என்று அன்புடன் அழைக்கபடுபவன் .அவன் எழுத்து மிக நன்றாக இருக்கும்,
அப்போதுதான் அந்த நிகழ்ச்சி நடந்தது.
நானும் சங்கரும் சங்கர் வீட்டு பின்னால் இருக்கும் பெரிய வாய்க்காலில் ஒரு லீவ் நாள் மதியம் விளையாடிக்கொண்டிருந்தோம்.
"ராம்ஜி மீன் பிடிக்கலாமாடா ?" என்றான்.
மிகுந்த குஷி ஆகி இருவரும் சிகப்பு கலர் காசி துண்டை அங்கு ஓடிய சிறிய ஓடையில் போட்டு குட்டி குட்டி மீன்களை பிடித்து ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டு அது ஓடுவதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்.
அப்போதுதான் எங்களுக்கு விதி கா. பா. என்கிற கமலாம்பாள் ரூபத்தில் வந்தது.
"என்னடா பண்றேள் , எனக்கும் ரெண்டு மீன் கொடுடா என்காத்து கிணத்துல போடணும் " என்றாள்
சங்கருக்கு கோபம் வந்தது
"ஆம்பளைகள் விளையாடும் இடத்தில உனக்கு என்ன வேலை? நாங்களே கஷ்டப்பட்டு (?? என்ன கஷ்டம் புரியவில்லை ) பிடிச்சிண்டிஇருக்கோம் இதுல இவளுக்கு வேற பங்காம்?" என்று சப்தம் போட்டான்.
பொதுவாக எனக்கு பிரச்சினைகள் பிடிக்காது. போனால் போகிறது இரண்டு மீன் கொடுப்பதில் என்ன குறைந்து விட போகிறது என்று "கொடுடா" என்றேன். ஆனால் சங்கரோ அதனை ஒரு தன்மான பிரச்னையாக கருதினான்.
ஆனால் அவளோ தன் இரு கை விரல்களையும் ஒன்று சேர்த்து நெட்டி முறித்து விட்டு " இரு இரு உனக்கு வெக்கறேன் வேட்டு" என்று கூறி சென்று விட்டாள்.

அப்போதே எனக்கு தெரியும் இந்த விஷயம் பெரிதாக போகிறது என்று.
மாலை மூன்று மணி இருக்கும் நான் ட்யுஷன் சென்றேன்.
ராஜம் சார் சேரில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தார்.
" மத்யானம் என்ன பண்ணின?"
"........"
"கேட்டதுக்கு டான் டான்னு பதில் வரணும்"
"எங்க போன?"
"........"
சுளீர் என்று பிரம்பால் ஒரு அடி விழ உண்மையை ஒத்துக்கொண்டேன்.
ராஜம் சாரிடம் வித்யாசமான தண்டனைகள் உண்டு.
ஆண்கள் அங்கே ஒரு அறை இருக்கும் அதற்குள் போய் உடையை களைந்து விட்டு சட்டையை கோவணமாக கட்டி வரவேண்டும். அவர் சொல்லும் எண்ணிக்கைக்கு அங்கிருக்கும் பிள்ளையார் படத்திற்கு தோப்புக்கரணம் போடவேண்டும். குற்றத்தின் தன்மைக்கேற்ப எண்ணிக்கை மாறுபடும்.

"போ சட்டைய கழடிட்டு கோவணம் கண்ட்டிண்டு 108 தோப்புகரணம் போடு " என்றார்.
எனக்கு அடியே மேலாகப்பட்டது.
வெட்கம் பிடிங்கி தின்றது. அழுதேன்.
" அழுதா 216 ஆகும் எப்படி வசதி?" என்றார்.
நான் அழுதபடியே நின்றேன்.
" நான் போய் கஞ்சி குடிச்சிட்டு வரதுக்குள்ள நீ ரெடி ஆகிடனும் " என்றார்.
அழுதபடியே திரும்பினேன்.
அட நம்ம ஸ்ரீதர் !!!
எனக்கு அழுகை மறந்து சிறிப்பு வந்தது
" உனக்கு என்னடா ஆச்சு?" என்று லாக்கப் பில் கைதிகள் கேட்பதுபோல் ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொண்டோம்.
அவன் ராஜம் சார் சொன்ன dress code படி தோப்புகரணம் போட ரெடி ஆகி இருந்தான்.
" காலம்பர கோயில் போனேன் "
"தப்பில்லையே"
" கோயில் போறது தப்பில்ல ஆனா காலம்பர போகும்போது சொல்லாம கொள்ளாம போய்டேன் , சாப்படல்ல, இன்னைக்கி திருவாதிரை இல்லையா பிரகாரத்துல கோலி விளையாடினேன் அங்க ரெண்டு கோஷ்டிக்கு சண்டை வந்துடுத்து வேடிக்கை பார்த்தேன். எங்க அப்பா தேடிண்டு வந்து வீட்டுக்கு வான்னவரு நேர இங்க கொண்டு வந்து விட்டுட்டார்" என்று தான் ராஜம் சார் கோர்ட்டில் தண்டனை கைதியாய் நிற்பதன் ரகசியம் சொன்னான்.
"எவ்ளோவு தோப்புகரணம் போடணும் " என்று என் அனுபவத்தை கேட்டான்.
" நீ செஞ்சதுக்கு கொறஞ்சது 108 வுண்டு" என்றேன்
" சீக்கிரம் சொன்னா தேவல்ல சாயந்திரம் நாடோடிமன்னன் வேற போகணும்" என்றான்
" நீ ஒண்ணு பண்ணு அதுக்கும் சேர்த்து இப்பயே இன்னொரு 108 போட்டுட்டு போய்டு , எப்படியும் உங்க அப்பா நாளைக்கி கொண்டு வந்து விடுவார்"
என்றேன்
அப்போது ஸ்ரீதரின் அப்பா அங்கு வந்தார்.
"என்ன முடின்ஜதா?" என்றான்
" இன்னம் ஆரம்பிக்கல்ல" என்றான்
அவர் நேரே சமையல் அறை சென்று
" ராஜம் ரெண்டு கண்ண மட்டும் விட்டுட்டு மீதிய எல்லாம் எடுத்துடு" என்று அவருக்கு பவர் ஆப் அடோர்னி கொடுத்து விட்டு போனார்.
அப்போது அங்கு வந்து சேர்ந்த சங்கர் எங்களை பார்த்துவிட்டு கா.பா. மாட்டிவிட்டுடாளா? என்று சப்தம் போடாமல் வாய் அசைத்து கேட்க நானும் சப்தம் போடாமல் கண் அசைத்து ஆம் என்றேன்.
ராஜம் சார் அங்கு வந்து இடுப்பில் இரண்டு கையை வைத்து நிற்க சங்கர் ஒன்றும் சொல்லாமல் நேரே உடை மாற்றும் அறைக்கு சென்று பழனி ஆண்டவர் போல் வெளியில் வந்து டான் டான் என்று பிள்ளையார் படத்திற்கு 108 தோப்பு கரணம் போட்டு விட்டு " நான் உள்ள போலாமா?" என்றான்
" இரு நீ என்னமோ வந்த தோப்புகரணம் போட்ட எனக்கு என்ன தெரியும் ? நீ உனக்கு என்னமோ பிரார்த்தனை போல இருக்குன்னு நினைச்சேன் . போடு இன்னொரு 108 " என்று கூடுதல் தண்டனை கொடுத்தார்.
என்னை கோவணம் கட்டிவர மிரட்டிக்கொண்டே இருந்தார் தெய்வாதினமாக சாரின் மனைவி வந்து
( என்னை தன் பிள்ளை ஆக கொஞ்சுவார் - அவருக்கு குழந்தைகள் இல்லை . அவ்வப்போது சங்கருக்கும் எனக்கும் அவர் செய்யும் டிபன் களை கொடுப்பார் )
அதெல்லாம் வேண்டம் வெறும் தோப்புகரணம் போடட்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆர்டராக கூற சாரும் சிரித்துக்கொண்டே "போ மாமிக்கு ரெண்டு சேர்த்து போடு " என்றார். நானும் மாமிக்கு தோப்புகரணம் போடபோக மாமி என் தலையை தடவிகொடுத்து "இன்னமே மீன் பிடிக்க மாட்டையே " என்று கூறி படிக்க அனுப்பினாள்.
ஸ்ரீதருக்கு நான் நினைத்தது போல் 108 தோப்பு கரணம் கிடைத்தது . போட்டு விட்டு வாசலில் உட்கார சொன்னார்.
" ராம்ஜியோட சேர்ந்து வீட்டுக்கு போ " என்றார். நான் வரும் வரை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
வகுப்பு முடிந்து வீட்டுக்கு போகும்போது பார்த்தேன் சார் சைக்கிள் பஞ்சர் ஆகிஇருந்தது. வேப்பன்கொட்டையை கூப்பிட்டு ஓட்ட சொன்னார்.
" பாத்தயா என்ன அடிச்சாரோனோ அதான் பஞ்சராயிடுத்து. " என்றான் ஸ்ரீதர்.
சைக்கிள் அருகில் ஒரு ஊக்கு இருந்தது.
" ஸ்ரீதர் ....?" என்றேன் அர்த்த புஷ்டியுடன்
"சே... ச்சே" என்றான் அதே பாவத்துடன்.
பொதுவாக இதே போன்று கட்டுரை எழுதும் போது கூடியவரையில் சம்பந்த பட்டவர்களிடம் இதை பற்றி கூறிவிட்டு எழுதுவது என் வழக்கம்.
சமிபத்தில் இது சம்பந்தமாக சில விளக்கம் கேட்க ஸ்ரீதர் வீட்டிற்கு போயிருந்தேன்.
ஸ்ரீதர் மனைவி நன்கு உபசரித்து டிபன் கொடுத்தார். பேசிகொண்டிருந்தேன் .
ஸ்ரீதரின் தங்கை பையன் ராமு வந்திருந்தான்.
"இவன் எங்கடா வந்தான் ?" என்றேன்
"அந்த நாள்ள நான் விஷமம் செஞ்சா எங்க அப்பா ராஜம் சார் கிட்டக்க கொண்டுபோய் விடுவார். அதுமாதிரி இவ அம்மா என்கிட்டக்க விட்டு போய்டா விஷமம் தாங்கல்ல போட்டேன் ரெண்டு " என்றான்
சற்று நேரம் பேசிவிட்டு கிளம்ப தயாரானேன் .
"வா நான் உன்னை TVS 50 ல கொண்டு விடறேன் பஸ் ஸ்டாண்ட் ல் " என்றான்.
சாவி எடுத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய சென்றான்.
நான் அவன் மனைவியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட ..
" என்னடி இது வண்டி பஞ்சர இருக்கு?" என்று ஸ்ரீதரின் குரல் வாசலில் இருந்து கேட்டது.
TVS 50 அருகில் இப்போது ஆணி கிடந்தது.
"ராமு ...?" என்றேன் அர்த்த புஷ்டியுடன்
"சே... ச்சே" என்றான் அதே பாவத்துடன்
Comments
Post a Comment