இசைவிழா
- இது ஒரு இசை விமர்சனம் அல்ல. விமர்சனம் செய்யக்கூடிய அளவுக்கு எனக்கு விஷயம் தெரியாது.
- சென்னையில் எங்கும் இசைவிழா நடக்கிறது. பாரதிய வித்யா பவனில் ஒரு மாதம் முன்னரே ஆரம்பித்துவிடுகிறார்கள். கடந்த 5 வருடங்களாக நேரம் கிடைக்கும் போது நானும் செல்வதுண்டு.
- அங்கு சுற்றி நடக்கும் விஷயங்களை பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
- பெரும்பாலும் சராசரியாக 40 வயதை தாண்டியவர்களை பார்க்க முடிந்தது. சிறு வயது பெண்கள் மற்றும் பையன்கள் வந்திருந்தார்கள் சொற்பமாக. அவர்களில் பெரும்பாலனவர்கள் NRI களாக இருதார்கள். இதிலிருந்து நம் குழந்தைகளை விட NRI கள் இசைக்கு அதிக முக்யத்துவம் கொடுப்பது தெரிந்தது.
- அபஸ்வரம் ராம்ஜி யின் மழலை மேதைகளில் சில NRI குழந்தைகளை காண முடிந்தது. பெரும்பாலான இளம் பெண் பாடகிகள் தாவணியுடன் வந்து மேடையில் பாடியது இனிமையாக இருந்தது.
- திருவிடைமருதூரில் திருப்பாவை திருவெம்பாவை பாடல் போட்டி RMM செட்டியார் சத்திரத்தில் நடக்கும். அந்த நினைவு வந்தது. பெரும்பாலும் சாந்தியே முதல் பரிசை வாங்கி செல்வாள் .
- சென்னையில் மாலை சபாக்களில் புறநகரை சேர்ந்த ரசிகர்கள் வீட்டிற்கு தேவையான காப்பிபொடி கீரைக்கட்டுடன் ஆபிசிலிருந்து நேரடியாக வந்திருந்தார்கள் . 8 .30 க்கு பாஸ்ட் புறநகர் ரயிலை பிடிக்க ஓடினார்கள் . ௦ ,
- பாரதிய வித்யாபவனில் ஒருநாள் மாலை பின் சீட்டில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன் . வளரும் பாடகி பாடிக்கொண்டிருந்தார். . கூட்டம் கம்மியாகவே இருந்தது.
- "Whose composition is this?" என்று நடுவிலிருந்து ஒரு குரல் எழ,
- "தியாகராஜா " என்றார் பாடகி.,
- நடுநடுவே செல் போன்களின் சிணுங்கல்கள் இருந்தாலும்
- "Excuse me" என்று அதட்டல்கள் கூடவே கேட்க முடிந்தது.
- பெரும்பாலும் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் போது ரசிகர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.,
- ஒருதம்பதியை கேட்டேன் எங்கிருந்து வருகிறார்கள் என்று
- " UK "
- "?"
- அந்த தம்பதி இசை விழா சமயத்தில் ஒரு மாதம் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கி ஒவ்வொரு சபாவிலும் கச்சேரியை ரசித்துவிட்டு பின்னர் தன் வெளிநாட்டில் இருக்கும் பையன் வீட்டிற்கு போய்விடுவார்களாம்.
- "உங்க ஊர்ல சமிபத்துல யானைகளுக்குன்னு ஒரு புத்துணர்ச்சி முகாம் நடந்ததே அதுமாதிரி இந்த டிசம்பர் சீசன் எங்களுக்கு ",
- என் அருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். அவரை பார்பதற்கு "ஆட்டோவுல எல்லா பசங்கலோடையும் உறசிண்டு போறாளே அதனால இருக்கும் " என்று ஒரு சோப்பு விளம்பரத்தில் வரும் ஆசாமி போல் இருந்தார். தன்னை ஸ்ரீநிவாசன் என்று அறிமுகபடித்துக்கொண்டார். ,
- ஒரு கச்சேரிக்கும் மற்றொரு கச்சேரிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ,
- என்னிடம் ராகங்களை பற்றியும் தாளங்களை பற்றியும் ஒவ்வொரு பாடலையும் பற்றி அளவளாவினார். கேட்டுக்கொண்டேன்.
- இசை கச்சேரிகளுக்கு இளைஞர்கள் குறைவாக வருவதை பற்றி குறைபட்டுக்கொண்டார்.
- "சரி சார் நீங்க சொல்றது சரி, ஆனா எனக்கு இதுல உள்ள அர்த்தங்கள் புரியலையே?" என்றேன்
- " அர்த்தம் புரிஞ்சாதான் பாட்ட ரசிக்கணும்னா தியாகராஜர், போன்று பாட்டை எழுதினவர்கள் மட்டும்தான் ரசிக்கமுடியும். இப்ப சமிபத்துல நாக்க மூக்கான்னு ஒரு பாட்டு வந்தது உனக்கு அர்த்தம் புரிஞ்சதா ? ஆனாலும் நீ டான்ஸ் ஆடலயோ ? முக்கால முக்காபல என்ன அர்த்தம் சொல்லு? ",
- என்னை தினமும் வரசொன்னார் .கச்சேரி எங்கெங்கு நடக்கிறது என்று ஒரு கையடக்க பத்திரிக்கையை கொடுத்தார்.
- "ஒரு காபி சாப்பிடலாமா ?"என்று என்னை கேண்டினுக்கு அழைத்துப்போனார்.
- அங்கே ஒரு இளம் தம்பதியை பார்த்தேன்
- " No dont take that chikku , I will give you chocolate" என்று தன் குழந்தயை அந்த பெண் அதட்ட,
- " See சுவாதி , அவளுக்கு என்ன பிடிக்கறதோ அதை எடுத்துக்கட்டும் நம்பளோட விறுப்பத்த அதுமேல திணிக்காத " என்றான் அந்த கணவன்
- "ஸ்ரீநிவாசன் சார் அந்த அட்வைஸ் உங்களுக்கு இல்ல " என்று கூறி அவரின் பதிலை கேட்காமல் 12B பிடிக்க சென்றேன் .,
- பின் குறிப்பு: for those who want to know about the programme list can visit the following website.
- http://ramsabode.wordpress.
com/concerts-in-chennai - Feedback to : ramkumar.v2009@gmail.com
Comments
Post a Comment