"..... நீங்கதான் உங்களை மாத்திக்கணும்..."




".. நீங்க ...? Mr ...."

"..சிவராமன் .. டாக்டர் .."

" ...ஆ... Mr சிவராமன் ... நீங்க தான் உங்க wife அ புரிஞ்சிக்கணும் ..."

இல்ல டாக்டர் ... முன்ன மாதிரி இல்ல எரிஞ்சி எரிஞ்சி விழறா ...சரியா தூங்கறது இல்ல .. மறந்து மறந்து போறா..."

"அதான் சொல்றேனே ... அவங்க இப்ப மெனோபாஸ் stage ல இருக்காங்க .. இது இயற்கை.....இந்த டைம் ல நீங்க தான் அனுசரிச்சி போகனும் 
அவங்க கோப பட்டா நீங்களும் சேர்ந்து கோப படாதீங்க ....அவங்களுக்கு இப்ப ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகக்கூடாது.
அவங்க இப்ப முன்ன மாதிரி தன்னால எதுவும் செய்ய முடியல்லையே என்று ஒரு எரிச்சல் வரும்.
as a husband நீங்க நிறையா அவங்களுக்கு அனுசரணையாவும் சின்ன சின்ன உதவிகளும் செய்யணும்.
அவங்கள தினமும் சாயந்திரம் அப்படியே காத்தாட வெளில அழைச்சி கிட்டு போங்க.  சீக்கிரம் அவங்க பழைய நிலைக்கு திரும்பிடுவாங்க...
சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க...

.....Mr. Sivaraman நீங்கதான் உங்களை மாத்திக்கணும்." என்றாற் டாக்டர் கமலா.

என்ன சார் அப்படி பாக்கறீங்க.. சார்  எனக்கு இப்ப 52 வயசாயிட்டது..என் wife க்கும் எனக்கும் 2வயசுதான் வித்யாசம் ...
அவங்க கொஞ்சநாளாவே ரொம்ப கோப படறாங்க tired ஆயிடறாங்க ...அதான் டாக்டர் கிட்டக்க அழைச்சி கிட்டு வந்தேன் ..நீங்க மேல படிச்சது 
அங்க நடந்த சம்பாஷணைதான்.

என் மனைவியை டாக்டர் சொன்னபடியே தினமும் மாலை வேலையில் வேலை முடிந்து எத்தனை மணிக்கு வீடு வந்து சேர்ந்தாலும் ஒரு மணி நேரம் வெளியில் அழைத்து கொண்டு போனேன்.,அவள் கேட்ட பழங்கள் வாங்கிக்கொடுத்தேன் ....

".....Mr. Sivaraman நீங்கதான் உங்களை மாத்திக்கணும்..."
----

"ஏம்பா சிவராமா ... சாயந்திரம் வரும்போது மறக்காம அந்த தூக்க மாத்திரைய வாங்கிகிட்டு வந்துடு...மூணு நாள் ஆகுது தூங்கி..."
வேற யாரும் இல்ல சார் எங்க அப்பாதான்  88 வயசு ஆகுது 

"சிவராமா கொஞ்சம் இங்க வாயேன் ...." அம்மாதான் கூப்பிட்டாள் .
"என்னம்மா ?"
"ஒன்னும் இல்ல.. உங்க அப்பாவுக்கு இது வரைக்கும் ஒரு சளி ஜலதோஷம் வந்ததில்ல இவ்வளவு வருஷத்துல ....ஆனாலும் அவரு முன்ன மாதிரி இல்ல .. கண்ணு ரொம்ப மங்கலாயிட்டது ...காதும் சசுத்தமா கேக்கறது இல்ல.. ராத்திரியானா தூங்கறதே இல்ல ....அவர ஒரு நல்ல ஆஸ்பத்திரி அழச்சி கிட்டு போய் காட்டிட்டு வந்திடு...நீ எவ்வளவோ செஞ்சிட்ட ... இந்த ஒரு கடமையையும் செஞ்சிடு ..அப்பாவும் அடிக்கடி சொல்றாரு .அந்த குறையும் வேண்டாம் ..செய்யறையா ?"

Geriyatric கேள்வி பட்டு இருக்கிங்களாஇதுதான் வயதானவங்களோட உடல் நலம் சார்ந்த படிப்பு... இவ்வளவு நாள் நான் கேள்விப்பட்டதே இல்ல 
இப்ப இதுக்குன்னு ஒரு தனி டாக்டரே இருக்காரு ...பாவம் ஏன் அந்த குறை அவர் ஆசை படற படியே அந்த டாக்டர் கிட்டக்க அழைசிகிட்டு போனேன் சார். 10,000 ருபாய் செலவாச்சு..எல்லா டெஸ்டும் எடுத்தாங்க.
(அவருக்கு கண்ணு தெரியல்லங்கறதையும் காதுகேக்கவே கேக்காதுங்கறதயும்பல்லெல்லாம் விழுந்துட்டது கறதையும் ... டெஸ்ட்ல செஞ்சி கண்டு பிடிச்சாங்க . இந்த சங்கதி தான் எனக்கே தெரியுமே ?)

சொல்லுங்க சிவராமன் ..." என்றார் டாக்டர் 

"இல்ல டாக்டர் இவர்தான் எங்க அப்பா ...ராத்திரி எல்லாம் தூங்க மாட்டேங்கறாரு ... ..தூங்கரவங்களையும் எழுப்பி விட்டுடறாரு..
நாங்க ரெண்டு பெரும் வேலைக்கு போயிடறதுனால ..மத்யானம் புல்லா இவர அம்மாதான் பாத்துக்கறாங்க ...டிபன் கேப்பாரு அம்மா கஷ்ட பட்டு செஞ்சாக்க ஒரே ஒரு இட்லி சாப்பிடுவாறு .. அதுக்கு தொட்டுக்க சட்னி சாம்பார்...அம்மாக்கும் 86 வயசாகுது .ரொம்ப கஷ்டமா இருக்கு டாக்டர்..."


" Mr.சிவராமன் ...இது எல்லா வயசானவங்களுக்கும் வரக்கூடியதுதான்..இந்த வயசுல அவங்க எல்லாம் 
மணி நேரம் தூங்கினாலே போதும் ...வீட்ல நீங்க ரெண்டு பெரும் வேலைக்கு போயிடறீங்க ...அவங்க தனியா இருக்காங்க ...தனிமை ரொம்ப கொடுமை படுத்தும். அவங்க பேசறத கேக்கறதுக்கு யாராவது கிடைக்க மாட்டாங்களான்னு ஏங்குவாங்க...நல்ல பழங்கள் வாங்கி கொடுங்க...அடிக்கடி வெளில அழைச்சி கிட்டு போங்க.அவங்க மேல கோப படாதீங்க...அவங்க குழந்தை மாதிரி..உங்க Wife யையும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சிகிட்டு போக சொல்லுங்க.. சார்after all அவங்க இன்னம் எவ்வளவு வருஷம் இருக்க போறாங்க?"

".....Mr. Sivaraman நீங்கதான் உங்களை மாத்திக்கணும்..."

--
"Mr Sivaraman  என்ன நீங்க இப்படி கோப பட்டு டீங்க ...உங்க கீழ வேலை செய்யற staffகிட்டக்க .. ஆபீசே 
திரும்பி பாத்திச்சு ....அப்படி என்ன ஆச்சு ..?" என்றார் என் சீனியர் மேனேஜர்.

பின்ன என்ன சார் ...இந்த காலத்து பசங்க எல்லாம் சம்பளம் அதிகம் வேணும்னு எதிர் பாக்கறாங்க ...
ஆனா அதே நேரத்துல வேலை செய்ய கூடாது....  எப்பபாருங்க போன் ...வர்றதே லேட் ..வந்த பிறகு 
டிபன் சாப்பிட போறாங்க  ..முடியல்ல சார் ....திட்டாம என்ன செய்யறது..?"

" Mr.Sivaraman.  உங்களுக்கே தெரியும் நம்ம கம்பெனி ரொம்ப சின்னது.இப்பதான் டெவெலொப் ஆகுது.
நம்பளால அதிக சம்பளம்   கொடுக்க முடியாது.ஆளுங்க கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு.நாம கொடுக்கறத 
விட சரவணாஸ் ஸ்டோர்ஸ் ல அதிகம் சம்பளம் .. எப்படி சார் retain செய்யறது ... மன்னிக்கணும் ..."

".....Mr. Sivaraman நீங்கதான் உங்களை மாத்திக்கணும்..."

--
நேரே என் நண்பன் ஸ்ரீதரை பார்க்க போனேன் 

"இதாண்டா .. என் பிரச்சனை ... என்ன எழவுடா இது எல்லாத்துக்கும் நானே அட்ஜஸ்ட் செஞ்சிக்கனும் கறாங்க ..இப்படித்தான் நேத்தைக்கி என்ன ஆச்சு தெரியுமா ?  பெங்களூர் ல வேலையா இருக்கற என்  பையன் கிட்டக்க போன் ல பேசினேன் ...உடம்பு சரியில்ல ...throat infection..அப்படின்னான் ..சரிடா உப்பு போட்டு காகிள் பண்ணு ... வெளில போகும்போது  காதுல பஞ்ச வெச்சிகிட்டு போ ..வெந்நீரே குடி அப்படின்னேன் ...அதுக்கு என்ன கத்து கத்தராங்கற ...நான் என்ன சின்ன குழந்தையா ... சும்மா அட்வைஸ் பண்ற எனக்கும் 22வயசாகுது ..என்ன பையனா பாக்காத Friendஆ பாரு ...அப்படின்னு கத்தறாண்டா ..
நீயே சொல்லு நான் என்னடா தப்பு செஞ்சேன் ?"

ஸ்ரீதர் சொன்னான்....

".....Mr. Sivaraman நீங்கதான் உங்களை மாத்திக்கணும்..."

----

நீண்ட இடைவெளிக்கு பிறகு ,
ராம்ஜி 

Comments

Popular posts from this blog

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

Short story

ஸ்கூலுக்கு நேரமாச்சு