Tuition

எனக்கு டியுஷன் சொல்லிக்கொடுத்தவர்கள்



சற்றே திரும்பி பார்க்கிறேன் எனக்கு தனி வகுப்பு எடுத்தவர்களை. வேடிக்கையாக உள்ளது இதனை பேரிடமா நான் படித்தேன்.?



திருவாளர்கள்



1 / நாகேஸ்வர சாஸ்திரிகள்தான் அக்ஷராபியாசம் சொல்லிகொடுத்தார்கள்.

2 / முதல் வகுப்பு படித்தபோது பீமா ராவ் . வயதானவர் .நான் ஒரு இடத்தில உட்காராமல் ஓடிக்கொண்டே இருந்ததால் என் இடுப்பில் ஒரு கயறு கட்டி அவர் கையில் கொடுத்திருந்தார்கள் அவரும் அதனை தன்னுடைய நாற்காலியில் கட்டி விட்டு எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார். விஷமம் செய்தால் அவரிடம் சொல்லி விடுவதாக என் அக்காக்கள் மிரட்டினர் . அனால் அவர் பரம சாது.



3 / நாராயணன் சார் . நீண்ட நகத்தை வைத்துக்கொண்டு கிள்ளுவார். ஒருமுறை எனக்கு கணக்கு சொல்லிகொடுத்தபோது அவர் போட்ட கணக்கிற்கு 100 க்கு 100 போட்டு வெறி குட் சார் என்றேன். நல்ல உதை கிடைத்தது.

"நாளைக்கி டியுஷன் கிடையாது "

" ஏன் சார் ?"

"விஜயதசமி இல்லையா ? அதுனால. "

"தினமும் விஜய தசமி இருந்தா நல்ல இருக்கும் இல்ல சார் ?"



4 / வாஞ்சி சார் ( நிச்சயம் பொய் பேச அவர் எனக்கு கற்றுத் தரவில்லை ) அனால் அவர் யாரிடம் பொய் பேச கற்றுக்கொண்டார் என்பதை ஸ்ரீதர் கப்போர்டில் திறந்து பார்க்க வேண்டும்.



5 / ரங்கசாமி ஐய்யங்கார்

6 / நானாக விரும்பி சென்ற ராஜம் சார் - என்னை சொந்த பையனாக பாவித்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. வேம்பு , பலகுருவிடம் பஞ்சர் ஒட்ட கற்றுக்கொண்டேன்.பஞ்சர் செய்ததுதும் அவர்களேதான் என்பது வேறு விஷயம்.

7 / குரு மூர்த்தி சார் இங்கிலீஷ் கிராமர் ,

8 / வெங்கட்ராமன் சார்- எங்க அப்பாதான் .இவர் மட்டும்தான் என்னை அடித்திருக்கின்றார்.

9 / பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஹிஸ்டரி மேப் க்காக மட்டும் தோட்ட சார். அவர் பையனிடம் கடி வாங்கினேன் -"என்ன இன்ஜெக்ஷன் போட்டானா?"

10 / தமிழுக்காக பா.மா. சார் ,

11 / பரமசிவம் சார்

12 / +2 physics ப்ராக்டிகல் க்காக SSR சார். இவரை மறக்க கூடாது.சைபர் மார்க் வாங்கிய என்னை அம்பதுக்கு அம்பது வாங்க வைத்தார். இதற்காக சுமார் ஒரு மாதம் இரவு ஒரு மணி வரை class எடுத்தார்.

13 / ஐயப்பா institute முத்து சுவாமி ஐயர். இன்றும் எனக்கு typewriting கை கொடுக்கின்றது.

14 / முத்து சுவாமி ஐயர் மனைவியிடம் ஹிந்தி

15 / காலேஜ் வந்த போது எகோநோமிக்ஸ் க்காக சிவபுண்யம் ( ஒருதலை ராகத்தில் ஒரு காட்சியில் வந்தார் - சிவஞானம் சார் தம்பி )

16 / காலேஜ் படித்தபோது காமெர்ஸ் சொல்லிக்கொடுத்த ஸ்ரீதர் ( Roots of Bhajanai madam புகழ் அதே ஸ்ரீதர்தான் )



"ஏன்டா நீ உத்ராபதி , சந்திரகாசு (தி . ஆ. மே .பள்ளியில் காவலர்களாக இருந்தவர்கள்-Peon )கிட்டக்கதான் ட்யுஷன் படிக்கல்லன்னு சொல்லு .. " என்று ஸ்ரீதர் கிண்டல் செய்வதுண்டு.



" என்ன பூசத்துக்கு ஊருக்கு வரையா?"



"தெரியலைடா .. எங்க ஆபீஸ்ல AMFI Exam எழுதினாதான் promotion அப்படிங்கறாங்க .. "

"அதுக்காக ?"

"அடையார் போகணும் ஒருத்தர பாக்க "

"எதுக்கு ?"

" டியுஷனுக்கு !!"



அன்புடன்

ராம்ஜி
9790778943
ramkumar.v2009@gmail.com

Comments

Popular posts from this blog

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

Short story

ஸ்கூலுக்கு நேரமாச்சு