உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

" உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?"


இப்படி ஒருவர் திடீர் என்று உங்களை கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?

என்னை கேட்டார் என்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு நண்பர்.

விஷயம் என்ன வென்றால் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கம் ஒரு இயக்குனரின் சகலை என் நண்பரின் கசின். அவர் தனியாக ஒரு படம் தயாரிப்பதாகவும், அவரே டைரக்டர் , ஹீரோ வாக செய்வதாகவும் மேலும் படத்தில் நடிக்க நடிகர்களை தேர்வு செய்வதாகவும் கூறினார்.


" சரி சங்கரன் நீங்க சொல்றத கேட்க ரொம்ப ஆசையா இருக்கு நாம எப்படி ஒர்கிங் டேஸ் ல நடிக்க முடியும் ?"

"அதெல்லாம் இல்ல சார், நம்ம பார்ட் ஷூட்டிங் எல்லாமே சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை தான்.இப்ப ஓகேயா ?"

எங்களை அவரின் கசினிடம் அழைத்து செல்வதாக கூறினார். எங்கள் அலுவலகத்தில் இருந்து நாங்கள் நான்கு பேர் தேர்வானோம்.

" ஒரு விஷயம் சார், இத அவரு ஒரு பரிசோதனை முயற்சில எடுக்கறாரு அதனால எல்லாரையும் அமைச்சூர் ஆக்டர்களா போடறார் . இதுல நீங்க எல்லாரும் பிரபலம் ஆகலாம். ஏன்னா அவங்க இதுக்கு முதல்ல ...... படங்கள எடுத்தவங்க " என்று அவர் ஒரு சில பிரபல படங்களை கூறினார்.

நாங்கள் வாயை பிளந்து கொண்டு கேட்டோம்

"அப்ப சம்பளம்னு ஒன்னும் கிடையாதுன்னு சொல்லுங்க "

"அதான் சொன்னேனே நீங்க எல்லாம் பிரபலம் ஆகலாம். இது ஒரு சோதனை முயற்சி . மினி பட்ஜெட் படம்."

"ராம்ஜி வாங்க நாம போய் நடிக்கலாம் ஓசில சான்ஸ் வருது இத ஏன் விடுவானேன் ?" என்றார் மற்றொரு நண்பர் சுந்தர்.

வடபழனியில் உள்ள ஒரு flat ற்கு போனோம்.

'ஒன்றிரண்டு சினிமா விநியோகஸ்தர்கள் பெயர் பலகையும் ரியல் எஸ்டேட் போர்ட்டும் கண்ணில் பட்டது.

அதனில் உள்ளே நுழைந்தோம்.

எங்களை ஒரு சிறுவன் அழைத்து போனான். ஒரு பெஞ்சியில் உட்கார சொன்னான். எங்கள் அருகில் எங்களை போல மூண்று பேர் தினத்தந்தி பேப்பருடன் உட்கார்ந்திருந்தார்கள்.

"யாருக்காக காதிருக்கிங்க ?" என்றேன்

" ஆக்ட் சான்ஸ் கேட்டு வந்திருக்கோம். தந்தில விளம்பரம் கொடுத்திருக்காங்க " என்றான் அந்த நடுத்தரவயது மனிதர்.

"உங்களுக்கு அனுபவம் இருக்கா?" என்றேன்

ராஜா ராணி படத்தில் சிவாஜியின் வசனம் பேசி காட்டினார்

"உங்களுக்கு எதுனா அனுபவம் இருக்குதுங்களா?" என்றார்

சிறு வயதில் ஒரு சுதந்திர தின விழாவில் மாறுவேட போட்டியில் பாரதி வேஷம் போட்டுக்கொண்டு

"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சம் இல்லையே .." என்று கூறிவிட்டு கூட்டத்தை பார்த்து பயந்து டிராயர் ஈரமானதுதன் மிச்சம்.

இருப்பினும் கேட்டவரிடம் தெரியாது என்று கூறாமல் அலுவலகத்தில் நாங்கள் ஒரு டிராமா குழுவில் இருப்பதாக கூறினோம்.

எங்களை உள்ளே கூப்பிட போனோம்

"வாங்க வாங்க சங்கரன் உங்கள பத்தி நிறைய சொன்னாரு . நீங்க எல்லாம் ரொம்ப interest ஆ இருக்கறதா சொன்னாரு . ரொம்ப சந்தோசம் " என்றார் தயாரிப்பாளர் சேது .

" ஆமாம் சார் எங்களோட வாழ்கையின் லட்சியமே ஒரு படத்துலயாவது ஆக்ட் செய்யணும். அது இப்பதான் கூடி வந்திருக்கு" என்று ஏகத்துக்கும் பில்டப் போட்டான் சுந்தர்.



" ஆமாம் சார் உங்களோட .. படம் படு சூப்பர் சார் நான் மட்டும் அத ஆறு வாட்டி பார்த்தேன் " என்றான் மூர்த்தி.


அந்தப்படம் படு சுமார் ஒரேவாரத்தில் ஊத்தியது. மூர்த்தி இப்படி கூசாமல் பொய் சொன்னது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.


" பின்ன என்ன ராம்ஜி சினி பீல்ட்ல இது சகஜம் " என்று எதோ அம்பது வருஷமாக சினி பீல்டில் இருபது போல் மூர்த்தி பதில் அளித்தான்.


தயாரிப்பாளர் சேது பேசினார்


"இது ஒரு வித்தியாசமான கதை .. ஹீரோ வெளிநாடு போய் சம்பாதிச்சி இந்தியா வர்றாரு வந்து தான் வாழ்ந்த ஊருக்கு ஏதாவது நல்லது செய்யணும் அப்படின்னு நினைகறார் .. இது கதையோட அவுட் லைன்" என்று அவர் கூற.

"ஏன் மூர்த்தி இது சிவாஜி கதை மாதிரி இருக்கே ?" என்றேன்


"சப்தம் போடாத கதைய கேளு " என்று என்னை அதட்டினான்.

" ஒரு கானா பாட்டு ஒரு குத்து பாட்டு ஒரு கனவு பாட்டு ஒரு அம்மா செண்டி மெண்ட் பாட்டு .. எல்லாமே நானே எழுதிட்டேன் கேக்கறிங்களா.." என்று கூறி சேது மேஜையின் மேல் தாளம் போட்டுக்கொண்டே பாட ஆரம்பித்தார்.


" என்ன அருமையா இருக்கு சார். உங்களுக்கு சங்கித ஞானம் பிரமாதமா இருக்கே ? எங்க கத்துகிட்டிங்க " என்று சுந்தர் கேட்டது எனக்கு கோபம் வந்தது.

"எல்லாம் தன்னால வந்தது இன்னம் நிறையா இருக்கு கேக்கறிங்களா?"

"ராம்ஜிக்குதான் பாட்டுல ரொம்ப இஷ்டம் .. என்ன ராம்ஜி ? ஒரு சண்டே வந்து சார் பாட்டு முழுக்க கேட்டு என்ஜாய் பண்ணுங்க" என்று என்னை சாட்டி விட்டது எனக்கு கோபத்தின் உச்சிக்கே போனேன்.


"சுந்தர் நீங்க சிங்கப்பூர் போலீஸ் கேரக்டர் பண்ணுங்க , மூர்த்தி அய்யர் வேஷம் போடட்டும். ராம்ஜி நீங்க சேட்டு வேஷம் போடுங்க உங்களுக்கு நல்லா சூட் ஆகும் " என்று சேது கூறினார்.


" என்ன பேசணும்?" என்றேன்

"என்ன சொல்றான், நம்பிள் கேக்கறான் , நிம்பிள் சொல்றான் அப்படின்னு பேசணும் வெத்தலை போடுவீங்க இல்ல ? அப்டியே ஒரு வெள்ள பைஜாமா கொண்டு வந்துடுங்க . நம்ம ஆபிஸ்ல ஒரு கதர் குல்லா இருக்கு உங்களுக்கு சூட் ஆகும் "


கற்பனையில் கண்ணை மூட "சைதாங்கி பச்சா .." என்று பேசினேன்

"இத பாருங்க உங்க அப்பாவோட பைஜாமா இருக்கு அத வேணா கொண்டு போங்க.வேற எதுவும் இங்கேந்து கொண்டு போககூடாது " என்று என் மனைவி திட்டினாள்


"இல்லடி அது எங்க அப்பா ஸ்கூல் போன காலத்துல nineteen seventis ல போண்டுண்டது எனக்கு ரொம்ப பெருசா இருக்கும் .. ஒன்னு வாங்கிகரேனே உனக்கு உன் புருஷன் பெரிய ஆக்டரா வர்றது சந்தோஷம் இல்லையா ?" என்றேன்


" நீங்க ஒன்னும் கிழிக்க வேண்டாம்.இருக்கற வேலைய காப்பாத்திக்கங்க"

எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி இருந்த ஒரு ஜிப்பாவை எடுத்துக்கொண்டு ஷூட்டிங் போனேன்.

ஷூட்டிங் முதல் நாள் கோல்ட் கவரின் கடைக்கி போய் ஐநூறு ரூபாய்க்கி ஒரு செயின் , நான்கு கல் வைத்த மோதிரங்கள் வாங்கினேன்.


ஒரு சின்ன பையன் தான் கேமரா மேன்.

"ஏம்பா இதுக்கு முன்னாடி நீ என்ன பண்ணி இருக்க?" என்றேன்

" GK வேல் ஸ்டுடியோல லைட் பாயா இருந்தேன்"

"எது லஸ் ல இருக்கே போட்டோ ஸ்டுடியோவா?"

"ஆமாங்க "



ஷூட்டிங் தயாரிப்பாளரின் வீட்டருகிலேயே நடந்தது .போரூரை தாண்டி ஒரு அவுட்டர் மெட்ராஸ்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சின்ன பையன்கள் என்னை பார்த்து சிரித்தார்கள்.ஒரு சிலர் என் பைஜாமாவை பிடித்து இழுத்தார்கள்.


கதாநாயகியாக சைதாபேட்டை யிலிருந்து ஒரு குப்பத்து பெண்ணை பிடித்திருந்தார்கள். அந்த பெண் புஷ்டியாக இருந்தாள் பட்டையாக உதட்டில் சாயம் பூசி , முகத்தில் ஒரு இஞ்சிற்க்கு பவுடர் போட்டிருந்தாள். ஓய்வு நேரத்தில் ராணி படித்தாள்



"டைரக்டர் சார் ஒரே தாகமா இருக்கு ஒரு கூல் ட்ரின்க் வாங்கிகறேன் " என்று தயாரிப்பாளரின் கணக்கில் பெட்டிகடையில் கோலா வாங்கி குடித்தாள்.

சுந்தர் அவளை சுற்றி சுற்றி வந்தது எனக்கு குமட்டியது.

மதிய சாப்பாடாக தயாரிப்பாளர் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம் வந்தது.

மேக்அப் மேன் என்று ஒருவரும் கிடையாது நாங்களே Ponds பவுடர் போட்டுகொண்டு வந்து நின்றோம் .

"அதான் சொன்னேனே சார் இது மினி பட்ஜெட் படம் அப்படின்னு ?" என்றார் அடிக்கடி சங்கரன்.


"ராம்ஜி சார் உங்க மொபைல் கொடுங்க என்னுதுல சிக்னலே இல்ல " என்று கூறி தயாரிப்பாளர் என் போனிலிருந்து சுமார் முன்னூறு ரூபாய்க்கி போன் பேசினார்.


"இதெல்லாம் பார்த்தா முடியுமா பின்னால பெரிய ஆளா வந்தா காசு கொட்டு கொட்டுன்னு கொட்டும் "என்று சுந்தர் உசுப்பு ஏற்றினான். படு ஜாக்கிரதையாக தனது மொபைலை ஒளித்து வைத்தான்.


சுமார் ஒரு மாதம் ஷூட்டிங் நடந்தது

டப்பிங் என்று கூப்பிட்டார்கள். பேசுவதற்கு ஆள் கிடைக்காததால் என்னையே ஏழு எட்டு கேரக்டர்களுக்கு குரல் மாற்றி பேச சொன்னார் தயாரிப்பாளர்.

முதலில் ஏகப்பட்ட தியேட்டர்களை கூறினார். பின்னர் சைதாபேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் காலை 11 மணி காட்சியாக ரிலீஸ் ஆனது.

நான் போனபோது ஒரே கூட்டம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர்தான் தெரிந்தது அந்த கூட்டம் அன்றே ரிலீஸ் ஆன விக்ரம் நடித்த நான் கடவுள் படம் காண வந்த கூட்டம் என்று.


கவுண்டரில் கையை விட்டு ஒரு பால்கனி டிக்கெட் கேட்டேன். அந்த ஆள் பால் கனி கிடையாது உங்க ஒருத்தருக்காக A/c போடமுடியாது என்று கூறி ஐம்பது ரூபாய் டிக்கெட் கொடுத்து உட்கார சொன்னார்.

தியேட்டரில் தனியே உட்கார பயமாக இருந்தது. நல்ல வேலை கேமரா மென் பாலாஜி வந்திருந்தான் .

"சார் பயபடாதீங்க நான் இருக்கேன்.என்று கூறி படம் ஆரம்பித்ததும் ஹீரோ என்றியின் போது கொண்டு வநத பேப்பர் குப்பைகளை தூக்கி வீச சொன்னான். அது நிழலில் பூக்கள் போல் விழ நாங்களே "வருங்கால முதலமைச்சர் வாழ்க " என்று கோஷம் போட்டோம்.


கடைசி ரீலை கூட போடாமல் அந்த ஆபரேடர் "வணக்கம்" ஸ்லைட் போட,மொத்த கூட்டமும் (23 பேர் ) எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் வெளியேறியது.!!!!


"எதிரே பாக்கல்ல சார் இப்படி படம் ஊத்திக்கும்னு . பாருங்களேன் நீங்க நடிச்ச காமடி காட்சி கூட சோகமா போய்டிச்சி ?" என்றான் பாலாஜி

"அடபாவி நான் உசிர கொடுத்து உணர்ச்சிகரமா நடிச்சேனே ஹீரோ கஷ்ட படும்போது என் செயினை கொடுத்து உதவும்போது ரொம்ப அழுது நடிச்சேனே ? இன்னம் சொல்லபோனா ஷாட் முடிஞ்சபிறகு கூட ஒரு ஓரமா ஒக்காந்து அழுதேனே ?அது காமடி காட்சியா? ஏம்பா சொல்ல கூடாது ? இது காமடி காட்சின்னு ? நான் படம் முழுக்க சோகமா இல்ல நடிச்சேன் ?"

என் பதிலை கேட்க அவன் அங்கு இல்லை. மாறாக அவனுடைய காதலிக்கு SMS அனுப்புவதில் மிகவும் சுறு சுறுப்பாக இருந்தான்.


வெளியே தயாரிப்பாளரை பார்த்தேன் யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தார்

"ராஜ் டிவி தானே ..? நிச்சயம் உங்களுக்குத்தான் ... தீபாவளிக்கு உலகதொலைகாட்சிகளில் முதல் முறையாகன்னு நீங்க போட்டுக்கலாம் உங்களுக்குத்தான் விக்க போறேன் .. ஹலோ ஹலோ ...இருங்க பாட்டரி வீக்கா இருக்கு வேற மொபைலேந்து பேசறேன் ..." என்று எங்கள் பக்கம் திரும்ப, நான் அவரை பார்க்காததுபோல் வேறு பக்கம் போனேன். முதல் காரியமாக எனது மொபைலை பத்திர படுத்திக்கொண்டேன் .


அன்புடன்

ராம்ஜி

09790778943

Comments

Popular posts from this blog

Short story

ஸ்கூலுக்கு நேரமாச்சு