சமய குறவர்கள்

நடந்த வருடம் தோராயமாக 1978 - 79 நாங்கள் அனைவரும் ஹையர் செகன்ட்ரி முதல் பாச் முதல் வருடம்.


நடந்த இடம் வாஞ்சி சார் வீட்டு வாசல் திண்ணை.


"டே பசங்களா உங்களுக்கெல்லாம் நல்ல சேதி? இந்தவருஷம் Plus 1 First Year முதல் செட்டுங்கறதுனால பரிஷ்சை எழுதின எல்லோரையும் MGR பாஸ் போட சொல்லிட்டார் தெரியுமோ !"


இது எனக்கு தெரிந்து நான் நேரே கேட்டு வாஞ்சி சார் சொன்ன ஒரு நிஜமான செய்தி.


"ஏன்டா ஸ்ரீதர் உங்க சித்தப்பா சொல்றது நிஜமாடா ?" என்றேன்

"ராம்ஜி.. எங்க சித்தப்பா எப்பையாவது தப்பி தவறிப்போய் நிஜமும் சொல்வார் !"


"இது நல்ல இருக்கே!!"



"ஆமா இவன் மட்டும் ரொம்ப அரிச்சந்திரன், ராம்ஜி.. எங்க அப்பா

எப்பையாவது தான்டா தவறுவார் !" என்றான் ரமேஷ்


"இதுவும் நல்ல இருக்கு "


" இத மீறி அவர கேட்டா 'வள்ளுவரே சொல்லி இருக்கார் பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின் ' ஒன்னும் தப்பில்ல அப்படிம்பார்



ஆனா ஒன்னு ராம்ஜி .. அவர் சொல்றதால யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது."

அவர் பாட்டுக்கு கோயில் திருக்குளம் பத்தி எறியறதுன்னு பாட்டிம்மாக்களட்ட சொல்லிண்டு போயிண்டே இருப்பர். இதுல யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது.


"ஒரு வேளை இந்த வருஷம் Plus one first set ங்கறதால ஆல் பாஸ் அடுத்தவருஷம் plus two first set ங்கறதால ஆல் பாஸ், அதுக்கு அப்புறம் College க்கு போற first set அப்படின்னு பாச போடுவாளோடா?" என்ற எனது கேள்வி காற்றில் பறந்தது.


"அது சரி அப்ப ஏண்டா? எக்ஸாம் வைக்கிறாங்க ? எப்படா லீவ் விடுவான்னு இருக்கு " என்று ஆதங்கபட்டான் வெங்குட்டு .

"எனக்கு எப்படா வேலைக்கி போய் retire ஆயிட்டு எங்க பெரியப்பா மாதிரி கயத்து கட்டில்ல வாசல்ல கால் மேல கால் போட்டுண்டு

" யார்ரீ அங்க சொம்புல தூத்தம் கொண்டுவானு" விரட்டிண்டே வாசல்ல உக்காருவோம்ம்னு இருக்கு " என்றேன்

"வாத்யாருக்கு எல்லாம் ஏதாவது வேலை கொடுக்கணுமே அதுக்காகத்தான் எக்ஸாம் " என்று விளக்கம் கொடுத்தான் ஸ்ரீதர்.


"அதெல்லாம் சரி முன்னாடியே பாஸுனுட்ட ஏன் படிக்கணும் exam hall ல் எப்படிடா 3 மணி நேரம் உட்கார்றது ? என்னதான்னு எழுதுவ ?" என்று வெங்குட்டுவின் நியாயமான கேள்வி பிறந்தது.



"படிச்ச வரை எழுதறது ? என்றேன்


"ராம்ஜி..... நீ சொல்றது படிச்சவாளுக்கு


நாங்க எப்படி பொழுத போக்கறது ? அதுக்கு வழி சொல்லு ?" என்றான் ரமேஷ்


"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் , யாரும் பேப்பர திருத்த போறது கிடையாது ராம ஜெயம் கூட எழுதலாம் இவ்வளவு ஏன் நாடோடி மன்னன் கதைய கூட எழுதலாம் " என்று ஸ்ரீதர் யோசனை கூறினான் .

" அப்ப அடிஷனல் பேப்பர் நிறையா இல்ல தேவை படும் ..??" என்றேன்

" அதுக்கு என்ன பண்றது ?" என்றான்
எனக்கு இந்த யோசனை சரியாக படாததால் தெரிந்த வரையில் எழுதலாம் எப்போதும் போல் என்று இருந்து விட்டேன்.


தேர்வு முடிந்தது கடைசி நாள் எல்லார் மேலும் இங்க்

தெளித்துக்கொண்டோம் . இங்க் தெளிப்பதை ஒரு சமூக கடமையாகவே ஒரு சிலர் செய்தார்கள்.

பள்ளி திறக்கும் நாளும் வந்தது .அப்போதுதான் வெங்குட்டு ஒரு குண்டை தூக்கிப்போட்டான் .


" ஒரு விஷயம் தெரியுமா ? "

"என்ன?"

"நாம எழுதின பேப்பரை எல்லாம் திருத்திட்டாளாம் இன்னைக்கி பேப்பரை தரபோராளாம்"



கிழிஞ்சுது போ இன்னிக்கு நான் "செத்தேன் !" என்றான் ஸ்ரீதர்

தமிழ் ஆசிரியர் சா. வா . கணேச முதலியார் வகுப்பறையில் . ஒவ்வொருவரையும் கூப்பிட்டு பேப்பரை கொடுத்தார் .



"ஸ்ரீதர், ரமேஷ் , வெங்கட்ராமன் மூணு பேரும் staff room முக்கு வந்து பேப்பரை வாங்கிக்குங்க" என்று கூறி விட்டு போய்விட்டார்.



"என்னடா என்ன ஆச்சு ? என்னத்த எழுதின ?" என்றேன் ஸ்ரீதரிடம்


" எழுதி கொடுத்ததை படிச்சா தானே என்ன எழுதினேன்னு எழுதினத சொல்லலாம் , ஒவ்வொரு பேப்பர்லையும் ஒண்ணொன்னு எழுதினேன் , இதுல என்ன எழுதினேன்னு ஞ்பாகம் இல்ல " என்றான்.



முதலில் ரமேஷ் போனான் உள்ளே

சிறிது நேரம் சப்தம் மட்டுமே கேட்டது .

கன்னத்தை தடவியபடி வெளியில் வந்தான் .


"என்ன ஆச்சு ?" என்றேன்

" Baby sir பின்னி எடுத்துட்டார் டா "என்று கன்னத்தை தடவியபடியே கூறினான்


"ஏன்டா தமிழ் க்கும் Baby sir ருக்கும் என்ன சம்மந்தம்.?"

"staff room ல போனா இதான் ஒரு problem .

லாக்கப் கைதிய போற வர்ற போலீஸ் எல்லாம் அடிக்கற மாதிரி எல்லா வாத்யாரும் அடிப்பாங்க "


"ஆமா நி என்ன எழுதி இருந்த ?"

"Question paper ரை அப்படியே எழுதினேன் அவ்ளோதான்... இதுல யும் ஒரு 5 கேள்விய விட்டுட்டேன் அதுக்குதான் ரொம்ப அடி."

"ஏன் விட்ட ?"

"choice ல விட்டேன் " என்று ரமேஷ் கூறியது ,


இவனுக்கு இது தேவைதான் என்று எனக்கு பட்டது.


அடுத்து வெங்குட்டு முறை . அவனும் போன கையேடு தலையில் கை வைத்தபடி திரும்பி வந்தான்.


"யாருடா அடிச்சா?"


"தோட்ட சார் டா ..ஐயோ ..."

"அவர் எங்க அங்க வந்தார் ?"


"கை அலம்ப போனார் போற போக்குல ரெண்டு குட்டு நறுக்குன்னு போட்டுட்டு போய்ட்டார் டா .."


"நி என்ன எழுதின ?"

"எதாவது படிச்சா தானடா எழுத ..?"


"அதான் தெரியுமே மேல சொல்லு "

"தமிழ் பேப்பர் ல இங்கிலீஷ் எழுதினேன் ."


"பரவா இல்லையே அதுவாவது உனக்கு நியாபகம் இருந்ததா?"


"இல்லடா பக்கத்துக்குல 7 - ம் கிளாஸ் பையன பாத்து அவனோட இங்க்லீஷ்ஷை எழுதினேன் . அதான் தோட்ட சார் பின்னி எடுத்துட்டார் "


ஸ்ரீதர் முறை வந்த போது அவன் எழுதின பேப்பர் கண்ணன் சாரிடமும் விஸ்வனாதசாரிடமும் காட்டப்பட்டன இருவரும் நம்பியார் அசோகன் போல் வில்லன் மாதிரி சிரித்துவிட்டு



இந்த பேப்பரை அப்படியே அவன் அப்பாவுக்கு குடுங்க சார் என்றனர்.



சா. வா. கணேச முதலியாரும் அவனை ஒன்றும் செய்யாமல் போக சொல்லி விட்டு அவன் தங்கை ஹேமாவை கூப்பிட்டு அனுப்பினார்.


ஹேமா உள்ளே சென்று விட்டு வெளியே பேப்பர் உடன் வெளியில் கோபமாக வந்தாள்.


"ஹும்.." என்று கூறிவிட்டு முகத்தை தனது தோள் பட்டையில் ஒரு இடி இடித்துக்கொண்டு "இரு இரு இன்னைக்கி நீ செத்த " என்று ஆரூடம் கூறிவிட்டு போனாள்.


இருவரும் மாலை பள்ளியை விட்டு நடந்தோம். ஒரே குழப்பம். ராஜன் சார் வீட்டு வாசலை தாண்டும்போது வாசலில் இடுப்பில் கையைய் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்.


"வா இங்க .." உடனே ஸ்ரீதர் போனான் பயந்து கொண்டே


நான் ஓடிப்போய் பஜனை மடத்தை தாண்டி நின்று கொண்டேன்.


அறை மணி கழித்து வெளியில் வந்தான்.

"என்னடா ரொம்ப பலமா ?"


"பின்னிபிட்டார் பின்னி "

"எதுக்குடா அடிச்சார் ?"


"அடிக்கறவர போய் காரணம் என்ன ? வாரன்ட் இருக்கான்னா கேக்க முடியும் ? அடிக்கணும் முடிவு பண்ணிட்டார் அடிச்சார்

எனக்கு மாமி மேலதாண்ட கோவம்."

"ஏன் மாமி என்ன பண்ணினா?"

"சாதரணமா மாமிக்கு வேண்டிய குழந்தைகள் அடிவாங்கினா உடனேயே கஞ்சி கொண்டுவந்து தருவார். சார் அடிக்கறத

பாதிலேயே நிறுத்திடுவா ..

ஆனா இன்னிக்கி என் விஷயத்துல அப்படி இல்ல அடிச்சி முடிக்கட்டும் அப்புறம் தரலாம்னு திரும்பியும் உள்ள போயிட்டா"

அந்த நாளிலேயே ஸ்ரீதர் அப்பா outsourcing முறையில் ஸ்ரீதரை கண்டிப்பதற்கு ராஜம் சாரிடம் power of attorney கொடுத்திருந்தார்.


ஸ்ரீதருக்கு மஹாதான தெருவில் வடக்கே ராஜம் சார் தெற்கே விரட்டுவதற்கு மண்டபத்தில் நாகராஜ கண்டியர்.


"சரி கொஞ்சம் தண்ணி சாப்பிடறயா ?ஆசுவாச படுத்திக்கலாம் "என்றேன்

இருவரும் மொட்டையர் கடைக்கி போனோம்.


அங்கு இருந்த பானையிலிருந்து இரண்டு தம்ப்ளர் தண்ணியை எடுத்து முகம் கழுவினான். இரண்டு டம்பளர் தண்ணிரை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டான். சட்டையை கழற்றி தலையை துவட்டிக்கொண்டு முகம் துடைத்துக்கொண்டு பின்னர் சட்டையை பிழிந்து உதறி இருந்த இரண்டு பட்டன்களை போட்டுக்கொண்டு "வா போகலாம் " என்று கூறி அவன் புத்தக பையை என்னை தூக்க சொல்லிவிட்டு வேகம் வேகமாக நடந்தான்.


அவன் பின்னால் ஓடினேன் .


எங்கள் அனைவருக்கும் முன்னமே ஸ்ரீதர் தங்கை ஹேமா வீட்டிற்க்கு சென்றிருந்தாள்.


வாசலிலேயே ஹேமா காத்திருந்தாள்.

ஸ்ரீதர் அவன் விட்டிற்கு நுழையும் போதே வேகமாக ஒரு உருமட்டை

அவன் மீது ஏவு கணை தாக்குதல் போல் விழுந்தது  .


அப்போது அவன் வீட்டிலிருந்த அவனது சித்தப்பாக்களும் பாட்டியும் ஏண்டா அடிக்கிற ஏண்டா அடிக்கிற ஸ்ரீதர முதல் நாளே என

கூக்குறலிட்டனர்.

"படவா" அவரும் வாத்யார் நானும் வாத்யார். பரிஷைல போய் இப்படியா எழுதறது.

ஒரு மரியாதை வேண்டாம்?

அதுவும் நாயன்மார்களை கேலி பண்ற உருப்புடுவியா நீ?.


பாட்டி "அப்படி என்னடா எழுதிட்டான் போய்? அடக்கிற அவன ? "

"அவன் எழுதின பேப்பர் பாரு " என்று தூக்கிப்போட்டார்.


சீனு சித்தப்பா அதனை எடுத்து பட்ஜெட் படிக்கும் நிதி மந்திரி போல் உறக்க படிக்க ஆரம்பித்தார்.


"சமய குறவர்கள் பற்றி சிறு குறிப்பு வரைக ..

இது கேள்வி



உன் பேரன் என்ன எழுதி இருக்கான் தெரியுமா சீனு படிக்கறான் கேளு


"சமய குறவர்கள் கூடிய வரையில் ரயிலடியிலேயே புளிய மரத்தடியில் இருப்பார்கள். எப்போதும் டால்டா டப்பா வைத்திருப்பார்கள். துப்பாக்கி கூட வைத்திருப்பார்கள் இரவில் வவ்வால் சுடுவார்கள்.பகலில் ஊசிமணி பாசிமணி விற்ப்பார்கள். நரிக்கொம்பு இவர்களிடம் மட்டுமே கிடைக்கும்.

யாருக்கும் புரியாத பாஷையில் பேசுவார்கள் அவர்கள் தெருவில் நடந்து வந்தால் நாய்கள் குறைக்கும். மேலும் ....................................."


மேற்படி இந்த மகத்தான செய்திகளை சமீபத்தில் ஸ்ரீதருடன் பேசும்போது நினைவு கூர்ந்தோம்.

"ஏண்டா அப்ப இதெல்லாமாடா நீ எழுதிருந்த .. ரொம்ப funny ஆ இருக்கே ?"

"என்ன பண்றது . அது ஒரு விளையாட்டு புத்தி காலம். வாழ்க்கையோட seriousness தெரியாத காலம். ஆனா அதுக்காக பின்னாடி ரொம்ப வெட்கப்பட்டேன்.அதுக்காக வருத்தப்பட்டேன்.


ஆனா ஒனக்கு ஒண்ணு தெரியுமோ?

அதுக்கு அப்புறம் அதே சா வா கணேச முதலியார் என்னை தனியாக கூப்பிட்டு வெச்சி ஒரு கிளாஸ்சே எடுத்தார். நான் உனது பெரிய தாத்தா அன்னு சாருடன் வேலை பார்த்தவன். சமயகுறவர்கள் அப்படின்னா யாரு அவா? செஞ்ச பணிகள் என்ன? . திருவிடைமருதூர்ல மகாலிங்க சாமி உள்ளிட்ட நம் தென்னாடு முழுவதும் அவா ஆற்றின பணி என்ன அப்படின்னு ஒரு பெரிய lecture கொடுத்தார். அவாள எல்லாம் கோயில்ல வெச்சி கும்பிடனும் ."


"சரி நேரம் ஆறது நான் கிளம்பறேன் ..ஆமா அந்த பேப்பர் இன்னாமா வெச்சிருக்க ?" என்றேன்

"இருக்கே !"

"எங்க வெச்சிருக்க ?"

"கப்போர்ட்ல ..!!"

"..??"

"அப்ப TDR Times க்கு அடுத்து நீ யார பத்தி எழுதறதா இருக்க ?"

"சமய குறவர்கள் "

அன்புடன்

ராம்ஜி

9790778943

Comments

Popular posts from this blog

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

Short story

ஸ்கூலுக்கு நேரமாச்சு