மகாலிங்கம்
மகாலிங்கம்சில நாட்களுக்கு முன்பு வடபழனிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன், கூட்டம் அதிகமில்லை,என்னையும் சேர்த்து ஐந்து பேர் இருந்தோம்.ஒரு இளைஞன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் இருமிகொண்டிருந்தார் இரு பெண்மணிகள் (வேலைக்கு போய் கொண்டிருந்தார்கள் ) வேறு யாரும் இல்லை.கண்டக்டர் "பேப்பர் ல என்ன தம்பி செய்தி ?" என்றார்
"என்ன அக்கிரமம் பாருங்க அம்பத்துர்ல ஒரு ஸ்கூல் பையன் வாத்தியார் திட்டினார்னு தூக்கு போட்டுகிட்டானாம் ..இந்த வாத்யாருங்களுக்கு எப்படி பாடம் சொல்லி தர்றதுன்னே தெரியல்ல ..பாவம் அந்த பையன் உசிரு போயிடுச்சி .."
"ஏன் தம்பி அந்த வாத்தியார் ஏன் திட்டினாராம்.?" என்றார் பெரியவர்.
"அது ஒண்ணும் இல்லைங்க அந்தபையன்தான் எப்பையும் கிளாஸ் பஸ்ட் வருவானாம் .. இந்தவாட்டி அவனுக்கு உடம்பு சரி இல்லை ரெண்டு மாசம் ஸ்கூல் போகல்ல அதுனால் என்ன பண்ணிட்டான் முழு ஆண்டு தேர்வுலபிட் அடிச்சிட்டான் அதை அந்த வாத்தியார் பார்த்து கண்டிச்சிட்டு பேப்பர பிடிங்கிகிட்டு போயிட்டாரு .. இதுதான் விஷயம் ..இப்ப சொல்லுங்க அந்த வாத்தியார் பண்ணினது தப்புத்தான ??"
விவாதம் சூடு பிடித்தது
"என்ன தம்பி பேசற .. அந்த பைய்யன் செஞ்சது தப்புத்தான ?"
"அதுக்காக கண்டிக்கலாமா இப்படி அப்படின்னு திட்டலாமா? இப்ப பாருங்க பையன் செத்து போய்ட்டான் ?"
"சரி அவன்தான் நல்ல படிக்கற பையனாச்சே ஏன் பிட் அடிச்சான் தெரிஞ்சத எழுதினாலே பாஸ் ஆயிடுவானே ?"
"யோவ் பெருசு விஷயம் புரியாம பேசாத ..அவன் அவங்க வீட்டுக்கு ஒரே பையன் இப்ப என்ன ஆச்சு ..? யாரு பொறுப்பு ?""தம்பி ஆசிரியர்கள் கண்டிக்கனும்தான் அப்பத்தான் பசங்க ஒழுங்கா படிப்பாங்கஇந்த காலத்துல குடும்பம் சின்னதா போயிட்டுது .. ஒரே குழந்தையோட நிறுத்திகிட்டாங்க..ரொம்ப செல்லம் கொடுத்து கெடுக்கறாங்க..இதமாதிரி பசங்க எல்லாம் பின்னாடி எப்படி உருப்புடுவாங்க..? தாங்கும் சக்தி மனதுக்கு இல்ல .. கோழையா இருக்காங்க அந்த பையன் நல்லா படிக்கற பையன்னு சொல்றிங்க அவன் நிலவரத்த ஒழுங்கா தலைமை ஆசிரியர்கிட்டக்க சொல்லி இருந்தா காலாண்டு அறையாண்டு மார்க்க வெச்சியே பாஸ் போட்டிருப்பாங்க... இதுக்கு உதாரணங்கள் இருக்கு "
பெரியவர் காரசாரமாக விளாசிக்கொண்டிருந்தார்.
"தம்பி .. எங்க காலத்துல எங்க அப்பா ஆசிரியர் கிட்டக்க சொல்லுவாங்க ' அய்யா என் பையன் ரெண்டு கண்ண மட்டும் விட்டுடுங்க மீதி என்ன வேணா செய்யுங்க' அப்படின்னுதான் சொல்லுவாங்க அதுனாலதான் நாங்க இந்த அளவுக்காவது நல்லா இருக்கோம் ... உங்களோட வாதம் தப்பு இதே நிலைல உங்க பையன வளர்த்து கெடுத்துடாதீங்க.... தங்கத்த அடிச்சாதான்நகைய பண்ணலாம் ...கத்திய வெச்சித்தான் அறுவ சிகிச்சை செய்யணும் அதுக்கு பயந்த முடியுமா ? போப்பா வேலைய பாரு .."கைதட்டல் கேட்டது . தட்டியது இரு பெண்மணிகள் -ஒருவிஷயம்.... இருவரும் ஆசிரியைகள்
ஒரு ஆசிரியரின் பையன் என்ற முறையில் மிகவும் நெகிழ்ந்து போனேன் .எனது ஸ்டாப்பிங் வந்ததால் இறங்க
முற்பட்டேன் .அவரின் பெயரை கேட்க ஆசை பட்டேன்"ஐயா .. ரொம்ப அருமையா சொன்னிங்க .. உங்க பேரு ..?"
"மகாலிங்கம் "
"ஊரு ?"
"திருவிடைமருதூர் அப்படிங்கற கிராமம் .."
பேருந்து என்னை இறக்கி விட்டு போய்விட்டது ..
அடேடே ஒரு முக்யமான மனிதரை தவற விட்டு விட்டேனே ..
உடனே ஸ்ரீதருக்கு போன் போட்டு
"ஸ்ரீதர் உன் டேட்டா பாங்க்ல மகாலிங்கம்னு பேர் இருக்கறவங்க யார் யாருன்னு சொல்லேன் "என்றேன்
"எழுதிக்கோ " என்று கூறினான் .
கானா மகாலிங்கம்,
ஆட்டுக்குட்டி மகாலிங்கம்
பந்தகார மகாலிங்கம்,
எடத்தெரு மகாலிங்கம் (கடை சின்னம்மா )
ஏட்டு மகாலிங்கம்
சன்னாபுரம் மகாலிங்கம்
பித்த வாய்வு மகாலிங்கம் ( இப்போ பிரபல காண்டிராக்டர்)
குண்டு மகாலிங்கம்(எங்க சித்தப்பா)
P.மகாலிங்கம் (பி மாலி)
அத்து வீட்டு மகாலிங்கம் (ஸி யு பி மகாலிங்கம்)
டி ஆர் மகாலிங்கம் (ஆசிரியர் )
ஏ எஸ் ஆர் வீட்டு மகாலிங்கம்
மேட்டூர் வீட்டு மகாலிங்கம் (பாபு)
பெண்டு மகாலிங்கம் (சாமியா பிள்ளை )
ஸி மகாலிங்கம் ( நம் தமிழ் ஆசிரியர்)
ரைட்டர் மகாலிங்கம் (ரைட்டர் மாலி சார்)
குள்ள மகாலிங்கம் (எடை தெரு ஜெகதீசஅய்யர் பிள்ளை)
பெத்தண்ணன் மகாலிங்கம் (டாக்சாமி பையன்)
ஹெட்மாஸ்டர் வீட்டு மகாலிங்கம் ( இண்டுஜுவல் அண்ணா)
பஜனை மகாலிங்கம் (பஜனை மாலி)
ராமய்யர் மகாலிங்கம்
பட்டாபி வீட்டு மகாலிங்கம்
டாக்டர் வீட்டு மகாலிங்கம்
டிப்டி விட்டு மகாலிங்கம்
டிஜி வீட்டு மகாலிங்கம்
முத்து ஜோஸ்யர் வீட்டு மகாலிங்கம்
ரகுபதி அப்பா மகாலிங்கம்
சிவசாம்ப அய்யர் வீட்டு மகாலிங்கம்
ரகு தம்பி மகாலிங்கம்
பா மா மகாலிங்கம்
தடி ராமன் தம்பி மஹாலிங்கம்
ஆர்ட்டு மணி தம்பி மகாலிங்கம்
G.R. மகாலிங்கம்
இந்த மட்டும் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா???
இது இல்லாமல்
நண்பர்களே உங்களுக்கு யாரேனும் மகாலிங்கம் என்ற பெயரில் திருவிடைமருதூரில் தெரியுமா?கூறுங்களேன் !! Please !!
அன்புடன் ராம்ஜி
Comments
Post a Comment