ஸ்கூலுக்கு நேரமாச்சு

(ஒரு கற்பனை துணுக்கு)



"ராம்ஜி நீங்க இன்னைக்கி சாயந்திரம் வீட்டுக்கு கண்டிப்பாக வாங்களேன் " என்றாள்

ஸ்ரீதரின் மனைவி.


"உங்க ஸ்பெஷல் அடை பண்ணி வையுங்கோ நிச்சயம் வறேன் "


அவசியம் இல்லாமல் போன் செய்யமாட்டாள் ஸ்ரீதரின் மனைவி

மாலை சரியாக ஆறுமணிக்கு போய் சேர்ந்தேன் .


"என்னம்மா அவசரமா வர சொன்னாயே என்ன ஆச்சு ?"

"உங்களுக்கு முதல்ல சாப்பிட என்ன வேணும் ?"

விருந்தோம்பலில் மிகசிறந்தவள் ஸ்ரீதரின் மனைவி.

"உன்னோட ஸ்பெஷல் அடை செய்யேன் ? அது சரி எதுக்கு கூப்பிட்ட ?"


"ராம்ஜி உங்க பிரெண்டோட போக்கு கொஞ்ச நாளா சரியாவே இல்ல நீங்கதான் கொஞ்சம் எடுத்து சொல்லணும் "

"ஏம்மா நல்லத்தான இருக்கான் நேத்திக்கு கூட என் கிட்டக்க பேசினானே ?"

" ராத்திரி தூங்கறதே கிடையாது எப்ப பார்த்தாலும் படிச்சுண்டே இருக்கார் ..."


"படிக்கறது ஒண்ணும் தப்பு இல்லையேம்மா ? ஏன்? அவன் TDR Times க்கு எழுதறத பத்தி சொல்றையா?"

"அதை பத்தியே நான் சொல்லல........ , பிரச்னை என்னன்னா...என் பெரிய பொண்ணோட பிளஸ் ஒன் புஸ்தகத்த வெச்சிண்டு படிசிண்டே இருக்கார். .."


"இது என்ன புதுசா இருக்கு ...? ஸ்கூல் நாள்லயே அப்படி படிச்சது கிடையாதே இப்ப ஏன் படிக்கறான் ?"


"ராத்திரி 11 மணி வரையிலும் படிப்பு ..அப்பறமாதான் தூங்கறார் .."

"சரி படிச்சிட்டு போகட்டுமே அப்புறம்தான் தூங்கிடரானே .. உனக்கு என்ன சிக்கல் இதுல ?"

"ஐயோ உங்களுக்கு புரியவே மாட்டேங்கறது.

அவருக்கு ராத்திரி ஆனா ஸ்கூல் போற நினைப்பு வந்துடறது...!?"


"ஐயையோ ..!!!"


"ஆமாம் ராத்திரி படுத்துண்ட உடனேயே ஒரே சொப்பனம வர்றது அவருக்கு .. ஸ்கூல்ல இருக்கர மாதிரியே பீல் பண்றார்.."

"அப்படின்னா ?"

"அதாவது தினைக்கும் ராத்திரி தூக்கத்துல டெஸ்ட் எழுதறார் !"

"ஐய்யயோ ஸ்கூல் நாள்ள இதெல்லாம் செஞ்சதே கிடையாதேம்ம்மா ?"


"அது என்ன பாவமோ தெரியல்ல நடு ராத்திரில நியூட்டன் மூணு லாவையும் ஒப்பிக்கறார், active voice, passive voice அப்படிங்கறார், மனப்பாட செய்யுள் எல்லாம் கமா, செமிகோலன் புல்ஸ்டாப் போட சொல்றார் "


"அப்படியா ?"

"ஒருநாளைக்கி தோட்ட சார் கிளாசாம் .."

"அவர் பெஞ்சிமேலன்ன நிக்க வைப்பார் ?"

"அதே தான் நின்னார் இவரும் கட்டில் மேல மணிக்கணக்கா நிக்கறார் .. தூக்கி வாரி போட்டு எழுந்தேன் . அப்புறம் திட்டினேன் பாத்ரூம் போயிட்டு வந்து தூங்கினார் . இன்னொரு நாளைக்கி என்ன ஆச்சு தெரியுமா? யாரோ ராசு வாமே ?"


"ஆமாம் அவர் எங்க ஹெட் மாஸ்டர் , கிளாசை விட்டு வெளில அனுப்பிடுவார்! ஏன் என்ன ஆச்சு இவன் விஷயத்துல ?"


"ஆமாம் ராம்ஜி இவரும் ரூமுக்கு வெளில முக்கா மணி நேரம் நின்னார் !"

"அப்புறம் எப்படி உள்ள வந்தான் ?"

"நல்ல வேளை அலாரம் அடிச்சது கிளாஸ் முடிஞ்சி போச்சுன்னு நினைச்சிண்டு உள்ள வந்து படுத்துண்டுட்டார்!"

"அடபாவமே இப்படியா நடக்கும் ? இப்ப எங்க அவன் ?"


"ரூம்ல படிக்கறார் "

சற்று நேரத்தில் ஸ்ரீதர் வெளியே வந்தான்.

"வாடா எப்ப வந்த ? ஏண்டி ராம்ஜிக்கு டிபன் கொடுத்தாயா ? ஏன்டா ராம்ஜி இந்த முதலாம் பானிப்பட்டு யுத்தம் எப்ப நடந்தது தெரியுமா?"


"தெரியலையே ,,

எனக்கு கார்த்தால படிச்சா Hindu பேப்பரே மறந்து போச்சு நி என்னடான்னா ..?"


"உனக்கு ஒரு எழவும் தெரியாது .. உருப்பட போறதில்ல வாத்தியார் பிள்ள மக்குன்கறதுக்கு நீ ஒரு உதாரணம் " என்று கூறிவிட்டு மீண்டும் ரூமுக்குள் போய் விட்டான்.

"ஏம்மா இவன் என்ன பானிப்பட்டு யுத்தம் பத்தி கேக்கறான் ?"


"இன்னைக்கி ஹிஸ்ட்ரி ஜியாகரபியா இருக்கும் ?

போன மே ஜூன் தான் இந்த பிரச்சன இல்லாம இருந்தது இப்ப திரும்பியும் வந்துடுத்து "

"அது என்ன மே ஜூன் ல விசேஷம் ?"

"Annual Leave ஆச்சே ?"

"ஒரு நாளைக்கி லேட்டா எழுந்தார் ,என்ன ஆச்சுன்னு கேட்டேன் , அதுக்கு
ஸ்பெஷல் கிளாஸ்ஸுன்னு சொல்றார் , எனக்கு பயமா இருக்கு ராம்ஜி .."

"சரி நி கவலை படாத நான் சொல்ற டாக்டர போய் பாரு அவர் கியூர் பண்ணிடுவார் " என்று கூறி அந்த டாக்டரிடம் appointment வாங்கி தந்து விட்டு இரண்டு நாள் கழித்து டாக்டரை பார்க்க போனேன் .


"வாங்கோ ராம்ஜி சார் உங்க பிரண்டோட ஓய்ப் வந்திருந்தாங்க எல்லாம் சொன்னங்க ஒண்ணும் பயப்படும்படியா இல்ல "

"என்ன டாக்டர் இது அவன் ராத்திரி எல்லாம் பரிஷ்ச எழுதறான் நீங்க ஒன்னும் இல்லங்கரிங்க ?"


"அது ஒன்னும் இல்லப்பா இது லட்சத்துல ஒருத்தருக்கு வரும் . நீ நினைக்கிறமாதிரி இல்ல . இது பேறு மானோ மேனி .."


"என்ன டாக்டர் குப்ப மேனி கணக்கா சொல்றிங்க ?"


"அது இல்லப்பா ஒரு சிலருக்கு மொழி பற்று இருக்கும் ஒரு சிலருக்கு தேச பற்று இருக்கும் உங்க பிரண்டுக்கு அவர் ஊர் மேல பற்று ஸ்கூல் மேல பற்று அதன் வேற ஒன்னும் இல்ல ..இது கொஞ்சம் டீப்பா போய்ட் டுது அவ்ளோதான். ஆன இதுக்கு மருந்து இருக்கு இந்தாங்க .." என்று கூறி மருந்து சீட்டை கொடுத்தார் . அதனை பிரித்தேன்.அதற்குள் அவருக்கு போன் வந்தது


"ஆமாம் டாக்டர்தான் பேசறேன் .. யாரு பேசறது...."

மருந்து சீட்டை பார்த்தேன்

"இவரை அரை மண்டலம் திருவிடைமருதூருக்கு அழைத்து செல்லவும் குறிப்பாக இரவில் அவர் படித்த பள்ளியில் தூங்க சொல்லவும் " என்று எழுதி இருந்தது

(படிக்கிற நாளுலயும் ஸ்கூல்ல கிளாஸ்ல அதத்தான பண்ணிண்டுருந்தான் என என் உள் மனதில் நினைவு வந்தது )


டாக்டரை பார்த்தேன்.போன் பேசிக்கொண்டிருந்தார்


".. என்னது லக்னோலேந்தா ? அவரும் திருவிடைமருதூரா ..?

இடை மறித்தேன் ..


"யாரு டாக்டர் .."

"லட்சத்தில் இருவர் எதுக்கு கூப்பிட்ட ?

"அவருக்கு என்ன மருந்துன்னு எனக்கு தெரியும் "

"dossage ?"

" தெரியும் "

"எவ்ளோவு ?"

"ஒருமண்டலம் "



இந்த மண்ணின் மீது, நமது தோசா உறுப்பினர்களுக்கு பற்றா ......பாசமா அன்பா......வெறியா?

முடிவு நமக்கு தெரிந்ததே......இருந்தாலும் உங்களிடமே விட்டு விடுகேறேன்.....







அன்புடன்

ராம்ஜி

9790778943



Comments

Popular posts from this blog

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

Short story