"..... நீங்கதான் உங்களை மாத்திக்கணும்..."
".. நீங்க ... ? Mr ...." ".. சிவராமன் .. டாக்டர் .." " ... ஆ... Mr சிவராமன் ... நீங்க தான் உங்க wife அ புரிஞ்சிக்கணும் ..." " இல்ல டாக்டர் ... முன்ன மாதிரி இல்ல எரிஞ்சி எரிஞ்சி விழறா ...சரியா தூங்கறது இல்ல .. மறந்து மறந்து போறா..." " அதான் சொல்றேனே ... அவங்க இப்ப மெனோபாஸ் stage ல இருக்காங்க .. இது இயற்கை.....இந்த டைம் ல நீங்க தான் அனுசரிச்சி போகனும் அவங்க கோப பட்டா நீங்களும் சேர்ந்து கோப படாதீங்க ....அவங்களுக்கு இப்ப ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகக்கூடாது. அவங்க இப்ப முன்ன மாதிரி தன்னால எதுவும் செய்ய முடியல்லையே என்று ஒரு எரிச்சல் வரும். as a husband நீங்க நிறையா அவங்களுக்கு அனுசரணையாவும் சின்ன சின்ன உதவிகளும் செய்யணும். அவங்கள தினமும் சாயந்திரம் அப்படியே காத்தாட வெளில அழைச்சி கிட்டு போங்க. சீக்கிரம் அவங்க பழைய நிலைக்கு திரும்பிடுவாங்க... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... .....Mr. Sivaraman நீங்கதான் உங்களை மாத்திக்கணும்." என்றாற் டாக்டர் கமலா. என்ன சார் அப்படி பாக்கறீங்க.....