நிஜம்
நிஜம் "ராம்ஜி சார் நீங்க ஒரு பைவ் மினிட்ஸ் எனக்காக ஸ்பேர் பண்ணமுடியுமா ?" என்றாள் என்னுடன் பணிபுரியும் பிரியா. "Sure வாங்க பேசலாம் " பிரியா எங்கள் அலுவலகத்தில் சேர்ந்து சுமார் ஆறு மாதங்கள் ஆகின்றன.நான் செய்யும் சில நல்ல காரியங்களில் அவளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக நாம் நமது பள்ளிக்கு (மேலும் சில காரியங்கள் )செய்ததை கேள்விப்பட்டு மிகவும் வியந்தாள். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. சமூக நோக்கு உடையவள். "May I come in Sir?" "எஸ் பிரியா !" "சார் உங்ககிட்டக்க ஒரு விஷயம் கேக்கணும் கேக்கலாமா ?" "கேளுங்க " "கொஞ்ச நாள் முன்னாடி TV ல மக்கள் அரங்கம் பார்த்தோம் . நீங்களும் உங்க நண்பர்களும் சேர்ந்து நிறைய நல்ல விஷயங்கள் செஞ்சிருக்கிங்க Great சார் . நானும் எங்க ஹஸ்பண்டும் சேர்ந்து ஒரு நல்ல காரியம் செய்யறோம் , அதுக்கு உங்க உதவி தேவ " பிரியா சற்று மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பெண் . புருவத்தை உயர்த்தி "என்ன " என்றேன். " சார் நானும் எங்க ஹஸ்பண்டும் சேர்ந்து மாசா மாசம் எங்களுடைய செலவுல ஒரு பகுதிய குறைசி...