நிஜம்

நிஜம்

"ராம்ஜி சார் நீங்க ஒரு பைவ் மினிட்ஸ் எனக்காக ஸ்பேர் பண்ணமுடியுமா ?"
என்றாள் என்னுடன் பணிபுரியும் பிரியா.
"Sure வாங்க பேசலாம் "

பிரியா எங்கள் அலுவலகத்தில் சேர்ந்து சுமார் ஆறு மாதங்கள் ஆகின்றன.நான் செய்யும் சில நல்ல காரியங்களில் அவளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக நாம் நமது பள்ளிக்கு (மேலும் சில காரியங்கள் )செய்ததை கேள்விப்பட்டு மிகவும் வியந்தாள். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகின்றன.
சமூக நோக்கு உடையவள்.

"May I come in Sir?"
"எஸ் பிரியா !"
"சார் உங்ககிட்டக்க ஒரு விஷயம் கேக்கணும் கேக்கலாமா ?"
"கேளுங்க "
"கொஞ்ச நாள் முன்னாடி TV ல மக்கள் அரங்கம் பார்த்தோம் . நீங்களும் உங்க நண்பர்களும் சேர்ந்து நிறைய நல்ல விஷயங்கள் செஞ்சிருக்கிங்க Great சார் . நானும் எங்க ஹஸ்பண்டும் சேர்ந்து ஒரு நல்ல காரியம் செய்யறோம் , அதுக்கு உங்க உதவி தேவ "

பிரியா சற்று மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பெண் . புருவத்தை உயர்த்தி

"என்ன " என்றேன்.

" சார் நானும் எங்க ஹஸ்பண்டும் சேர்ந்து மாசா மாசம் எங்களுடைய செலவுல ஒரு பகுதிய குறைசிகிட்டு ஒரு தொகைய சேர்த்துகிட்டு வர்றோம் அது இப்ப ஒரு நல்ல அளவுல சேர்ந்திருக்கு , என்ன மாதிரியே எங்க குடும்பத்துல எல்லாருமே செய்யறாங்க . இதுக்காக எங்க குடும்பத்துல ஒரு கமிட்டி பார்ம் பண்ணி இருக்கோம் . இப்ப என்னன்னா அத ஒரு நல்ல விஷயத்துக்கு செலவு செய்யணும்னு ஆசைப்படறோம் . உங்களுக்கு தெரிஞ்ச யாரவது உண்மையிலேயே கஷ்டபடரவங்க இருந்தா சொல்லுங்க நாங்க எங்களால முடிஞ்ச உதவிய செய்யறோம் . நீங்க நிறைய செய்யறிங்க , மத்தவங்க மூலமா தெரிஞ்சிகிட்டோம் . அதனால்தான் உங்க கிட்டக்க வந்தேன் . எவ்ளோவோ பேர் வந்தாங்க ஆனா பொய் சொல்லிக்கிட்டு வர்றாங்க . எங்களுக்கு உதவனும்கர எண்ணமே போயிடுமோனு பயமா இருக்கு ." என்றாள்.

அவளுக்கு எதாவது தெரிந்தால் கூறுகிறேன் என்று கூறிவிட்டு என் வேலையில் மூழ்கினேன் . பிரியா போன்றவர்கள் இருக்கும் வரை மழை வரத்தான் செய்யும். அதுவும் இந்த இளம் வயதில் அவளுக்கு இந்த எண்ணம் வந்ததை கண்டு மகிழ்ந்தேன் .அவளுக்கு என் வாழ்த்துக்கள்.
********
ஒருநாள் மைலாப்பூர் என் அறையின் வாசலில் அமர்ந்திருந்தேன் . எதிர் கடையில் சுமார் 40 வயது மதிக்க தக்க ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள்.
அந்தக்கடை இஸ்லாமிய நண்பர் என்னை காட்டி என்னமோ சொன்னார்.
நான் பொதுவாக நேரம் கிடைக்கும் போது அந்த இஸ்லாமிய நண்பரின் கடையில் அமர்ந்திருப்பேன் . அந்த 90 வயது பெரியவர் நான் வந்தால் தன் இருக்கையை விட்டு எழுந்து எனக்கு இடம் கொடுத்து விட்டு நான் படிப்பதற்கு அன்றைய தினசரியை தருவது வழக்கம்.

அந்த பெண்மணி என்னிடம் வந்தாள்

"அய்யா உங்களால ஒரு உதவி தேவ செய்ய முடியுமா ?"
"என்னம்மா ?"
"இந்த பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும் தீபாவளிக்கு முன்னாடி . நீங்க உதவி செஞ்சாக்க நல்ல இருக்கும் "
"நீங்க இரண்டு நாள் கழிச்சி வாங்க "
அந்த பெண் கையை கூப்பிவிட்டு சென்றாள். அவளுடன் அந்த 5 வயது பையன் சிரித்துக்கொண்டே என்னை பார்த்து கையை டாட்டா காட்டிவிட்டு சென்றான் . அந்த பயனின் முகம் என்மனதில் ஆழமாக பதிந்தது.

"என்ன பாய் நீங்க பாட்டுக்க யாரையோ என்கிட்டக்க அனுபிட்டிங்க நான் ஒன்னும் பெரிய ஆளு இல்ல பாய். எனக்கு தர்ம சங்கடமாக போய்விட்டது ' என்றேன்
" இல்ல சார் அது அந்த அம்மாவோட பையன் இல்ல .."
"பின்ன ?"
" சார் அது ஒரு கதை சார் .." என்றார் பெரியவர்

"அந்த பையனோட அம்மா ஒரு கை கால் விளங்காதவங்க சார் , கொஞ்சம் மனதும் பாதிக்க பட்டவங்க ...வீட்டு வேலை பார்த்து பொழைப்பை நடத்துது. பிரச்னை என்னன்னா அந்த பெண்ணை எவனோ சீரழிசிட்டான் சார் . அதுக்கு ஒண்ணுமே தெரியல்ல அதுவும் உண்டாயிடிச்சி ஆள் யாருன்னே தெரியல்ல .. ரொம்ப கொடும சார். அப்புறமா எப்படியோ
கண்டு பிடிச்சி போலீஸ் மூலமா கட்டி கொடுத்தாங்க. கட்டாயபடுத்தி கட்டி கொடுத்தா அவன் காப்பாத்துவானா சார் . அவன் ஓடிட்டான். அவங்க அம்மா இருந்த வரைக்கும் காப்பாதினாங்க இப்ப அந்த கிழவியும் செத்து போச்சு . இப்ப இந்த பையன் அவங்க பெரியம்மா தனலட்சுமி கிட்டக்க தான் வளர்றான். அவங்களும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படறாங்க .அவங்கதான் உங்க கிட்டக்க வந்து பேசினாங்க. " என்று ஒரு மெகா சீரியல் கூறினார்.

சற்று நேரம் வாயடைத்துப்போனேன்

அந்த பையனுக்கு யார் அப்பா என்று தெரியாது .. அந்த பெண்ணுக்கு யார் அந்த பையனின் தந்தை என்பது தெரியாது. ....

' சேரும் முகவரி சரியில்லை
அனுப்பிய முகவரி அதில் இல்லை
ஒரு கடிதம் அனாதை ஆகிவிட்டது. '


மொபைலை எடுத்தேன்

"98405..." dial செய்தேன்

"பிரியா நான் சொல்ற நம்பர நோட் பண்ணிக்கங்க . அவங்க பேரு தனலக்ஷ்மி 9840414815..... "

ஹரி கிருஷ்ணனுக்கான பள்ளி கட்டணத்தை வரும் முப்பதாம் தேதிக்கு முன் திருமதி பிரியா கார்த்திக் கட்டுகிறார்.

எனது பயணம் இன்னம் தொடர்கிறது ஒரு நிரந்தர தீர்வை நோக்கி ..

வானம் தொட்டுவிடும் தூரந்தான் .

அன்புடன்
ராம்ஜி









Image0038.jpgImage0038.jpg
61K View Download
Image0037.jpgImage0037.jpg
10

Comments

  1. 'NIJAM' IS REALLY AWESOME.....ESPECIALLY THE KAVIDHAI AT THE END .:)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

Short story

ஸ்கூலுக்கு நேரமாச்சு