Blessings of Maha swamigal -II

சிறுவனால் மாட்டிக்கொண்டோம்
காஞ்சி பெரியவருக்கு அருகில் இருக்கும் வாய்ப்பை பற்றி கூறினேன்.
பொதுவாக பெரியவருக்கு காப்பி குடிப்பது கூடாது என்ற கொள்கை உடையவர்.
இருந்தாலும் அங்கிருந்தது பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்து காரர்கள்தான்.அவர்களுக்கு காபி குடிக்காமல் இருக்க முடியாது. எனவே மடத்தில் பெரியவர் தங்கி இருந்த அறைக்கு சற்று தொலைவில் இருந்த ஒரு அறையில் மடத்து ஊழியர்கள் தங்கி இருந்தனர். அவர்களுக்கு வெளியிலிருந்து ஒரு பாட்டிலில் டிகாஷன் வரும் அதனை ஒளித்து வைத்து பாலை காய்ச்சி கலந்து குடிப்பது வழக்கம்.
ஒரு சில முறை நானும் காபி கலந்து கொடுத்திருக்கிறேன். சில வி ஐ பி க்கள் அங்கு அந்த அறைக்கு வருவர் அவர்களும் தங்களை ஆசுவாச படுத்திக்கொள்ள ஒரு கப் காபி சாப்பிடுவர்.
ஒருமுறை எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு முக்கிய புள்ளி சென்னையிலிருந்து தன் குடும்பத்துடன் வந்திருந்தார். எல்லோரும் முதலில் எங்கள் அறைக்கு வந்து தங்கள் கொண்டுவந்த பழங்கள் , பூக்கள் , காய் கறிகள் மடத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் மாட்டிற்கு தேவையான அகதிக்கிரை,புண்ணாக்கு ஆகியவற்றை அங்கே இறக்கி வைத்து தங்களின் உடைகளை மாற்றிக்கொண்டனர். அந்த மனிதர் அடிக்கடி வருவதுண்டு.அதனால் அவரும் நல்ல உரிமையோடு அங்கு வந்து எங்கள் அறையில் தங்குவார்.
அங்கிருந்த ஒரு ஊழியர் "டேய் அம்பி வந்தவாளுக்கு ஒரு டம்பளர் காப்பி கொடு " என்றார்.
நானும் அனைவருக்கும் காப்பி கலந்து கொடுத்தேன். பின்னர் அவர்கள் எல்லோரும் கொண்டு வந்த பொருட்களை பெரியவர் முன் வைக்க எடுத்து சென்றனர்.
பெரியவர் அந்த மனிதர் கொண்டுவந்த பொருட்களை பார்த்து பரவசப்பட்டார். அகத்திக்கீரையை தொட்டு பார்த்து , பசுமாட்டை வரவழைத்து அதற்க்கு கொடுத்து மகிழ்ந்தார்.
"எப்ப மெட்ராஸ் லேந்து கிளம்பின ?"
"காலம்பர நாலு மணிக்கு கிளம்பினோம் பெரியவா "
" கார்ல வந்தாயோ ?"
"ஆமாம் "
"இப்ப மணி என்ன ?"
" எட்டாக போறது."
"குழந்தை எல்லாம் பசியா இருக்குமே ? என்ன பண்ணின ?"
"அது பரவாயில்ல பெரியவா .. கொஞ்ச நேரத்துல சந்தர்பனைல சாப்பாடு போட்டுடுவா சாப்டுட்டு போய்டுவோம் .."
"சந்தர்பனைல அவன் முத்து கிருஷ்ணன் பத்தரைக்குன்னா சாப்பாடு போடுவான் .." என்றார் பெரியவர்.
வந்த அந்த முக்கிய மனிதர் சற்றே மிரண்டார்.
"இது யாரு உன் பேரனா ..?"
"ஆமாம் பெரியவா. உங்களோட ஆசிர்வாதம் வேணும் ..அடுத்த வருஷம் பூணல் போடறேன் "
"இந்தா பழம் சாப்பிடு உனக்கு பசிக்குமே ஆமாம் காலம்பர என்ன சாப்பிட்ட ?.." என்று ஒரு ஆப்பிளை அந்த பையனிடம் தந்தார் பெரியவர்.
அனால் அந்த பையனோ ஒரு குண்டை தூக்கி போட்டான்.
"நேக்கு பசிக்கல்ல .."
"ஏன் ..?"
"சந்திரா மாமா ரூம்ல காப்பி கொடுத்தா சாப்பிட்டேன் சூப்பரா இருந்தது .."
பெரியவர் காதில் விழாதது போல் சிரித்துக்கொண்டே வேறுபக்கம் திரும்பி மற்றவருடன் பேச ஆரம்பித்தார் நாங்கள் அவர் கண்ணில் அன்று முழுவதும் படாமல் இருந்தோம்.
இந்த பிரச்சினையிலிருந்து எப்படி தப்புவது. இனிமேல் வராமல் இருக்க என்ன செய்வது என்று எல்லோரும் பயந்தோம்.
கடைசியில் ....
...... நாங்கள் விருந்தாளிகளுக்கு காப்பி கொடுபதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்தோம்.
பெரியவர் சொல்லி கேட்காமல் விட்டதில் இதுவும் ஒன்று.

Comments

Popular posts from this blog

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

Short story

ஸ்கூலுக்கு நேரமாச்சு