உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?
" உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?" இப்படி ஒருவர் திடீர் என்று உங்களை கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? என்னை கேட்டார் என்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு நண்பர். விஷயம் என்ன வென்றால் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கம் ஒரு இயக்குனரின் சகலை என் நண்பரின் கசின். அவர் தனியாக ஒரு படம் தயாரிப்பதாகவும், அவரே டைரக்டர் , ஹீரோ வாக செய்வதாகவும் மேலும் படத்தில் நடிக்க நடிகர்களை தேர்வு செய்வதாகவும் கூறினார். " சரி சங்கரன் நீங்க சொல்றத கேட்க ரொம்ப ஆசையா இருக்கு நாம எப்படி ஒர்கிங் டேஸ் ல நடிக்க முடியும் ?" "அதெல்லாம் இல்ல சார், நம்ம பார்ட் ஷூட்டிங் எல்லாமே சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை தான்.இப்ப ஓகேயா ?" எங்களை அவரின் கசினிடம் அழைத்து செல்வதாக கூறினார். எங்கள் அலுவலகத்தில் இருந்து நாங்கள் நான்கு பேர் தேர்வானோம். " ஒரு விஷயம் சார், இத அவரு ஒரு பரிசோதனை முயற்சில எடுக்கறாரு அதனால எல்லாரையும் அமைச்சூர் ஆக்டர்களா போடறார் . இதுல நீங்க எல்லாரும் பிரபலம் ஆகலாம். ஏன்னா அவங்க இதுக்கு முதல்ல ...... படங்கள எடுத்தவங்க " என்று அவர் ஒரு சில பிரப...
Comments
Post a Comment