Blessings of Maha periyava IV

காஞ்சி மடத்திலேயே தங்கி இருந்ததால் பெரிய மனிதர்கள் வந்து போவதை அதிகம் காண முடிந்தது.

கடவுள் இல்லை என்று கூறி வந்த ஒரு கட்சி பிரமுகர் விடியற்காலை நான்கு மணிக்கு சென்னையிலிருந்து வந்து பெரியவாளை தரிசித்து சென்றது மறக்க முடியாது. R M வீரப்பனை பெரியவர் வீரப்ப ஆழ்வார் என்றே அழைப்பார்.

ஒரு முறை பெரியவரை தமிழக எல்லையில் வரவேற்க வந்த R M வீரப்பனிடம் "உங்க கிட்டக்க MLA இருக்கற மாதிரி என் கிட்டகையும் ஒரு MLA இருக்கான் தெரியுமா? " என்று கேட்டு சந்திராவை கை காட்டினார்.( சந்திரா விற்கு MLA என்ற ஒரு பெயரும் உண்டு.

அதே போல் மன நலம் குன்றிய குழந்தைகளிடம் பரிவு உண்டு. அந்த குழந்தைகளிடம் ஒரு சிறு குச்சியை கொடுத்து "இந்தா இங்க ஒரே கூட்டமா இருக்கு யாரும் ஒழுங்கா வரிசைல வரமாட்டேங்கறா நீ இருந்து கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு " என்பார்.





"அவன் சந்திரா தம்பி ராம்ஜி இங்கதான் இருக்கான் படிப்ப முடிச்சுட்டு , பாண்ட்ஸ் லேந்து நாராயணன் வந்திருக்கார் பெரியவா உத்தரவு கொடுத்தா அவா கம்பனில சேத்துக்க செய்வா" என்றார் பாலு அண்ணா

" உங்க கம்பெனில வேலை ஏதாவது காலியா இருக்கா? " என்றார் நாராயணனிடம்

"இருக்கு எடுத்துக்கலாம் "

"அவன் தகுதிக்கு எதாவது வேலை காலியா இருந்தா முயற்சி பண்ணி பாரு" என்றார் பெரியவர்









நாராயணன் மாமா நடுவில் அமர்ந்திருக்க சுற்றி நிறைய பேர் இருந்தனர்.

(மடத்திலேயே தங்கி இருந்தவர்கள் - பெரியவருக்கு உதவியாளர்கள் )அப்ளிகேஷனை கொடுத்தேன் .



என்னுடைய கேம்பஸ் இண்டர்வியு மடத்திலேயே நடந்தது.



"சந்தியாவந்தனம் ஒழுங்கா பண்றயா?"

"மாமா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிண்டு அபிவாதயே சொல்லு "

"அப்பா அம்மாவ கடைசி வரையிலும் ஒழுங்கா வெச்சி காப்பத்தனும் "

என்று என்னை சுற்றி இருந்த அணைத்து சாஸ்திரிகளும் கேள்வி கேட்டார்கள் - நாராயணன் அவர்களை தவிர .





Interview வில் முன்பே மனபாடம் செய்து கொண்டு போன படி உடனேயே ஒப்பித்தேன்.





"My Name is Ramkumar and my father's name is Venkataraman. I have completed my BA in AVC College Mayavaram.in the year..." என்று கட கட என சொல்ல ஆரம்பித்தேன் .





"இதெல்லாம் நாங்க உன்ன கேக்கவே இல்லையே . எல்லாம்தான் உன்னோட அப்ப்ளிகேஷன்ல இருக்கே? இங்க வேலைல சேர சம்மதமா?" என்றார் அப்போதைய GM





ஸ்ரீ மஹா பெரியவாளின் அருளால் மட்டுமே எனக்கு பாண்ட்ஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது.(1985/07/05). முதல் முதலாக பாண்டிச்சேரியில் போஸ்டிங் போட்டார்கள்.





ஒரு மாதம் போனதே தெரிய வில்லை . முதல் மாத சம்பளத்தை ஒரு கவரில் போட்டு கொடுத்தார்கள்.





அந்த வாரமே அந்த கவரை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் போனேன்

ஒரு தட்டு நிறைய பழங்கள் வாங்கிக்கொண்டேன் . சந்திராவிடம் போய் சொன்னேன் . என்னை வேதபுரி அழைத்துப்போனார்.

பழத்தட்டை பெரியவர் முன் வைத்தேன் அதன் மேல் என்னுடைய முதல் மாச சம்பளத்தை வைத்தேன்.





"என்ன ?" என்பது போல் வேதபுரி மாமாவை பார்த்தார் பெரியவர்.

"சந்திரா தம்பி வந்திருக்கான் உங்க ஆசிர்வாததால வேலை கிடைச்சது.

முத மாச சம்பளம் கொண்டு வந்திருக்கான்."

பெரியவர் அதனை தன் கைகளால் தொட்டு கையை உயர்த்தி ஆசி வழங்கினார்.





." அந்த கவர் பெரியவாளுக்கு தானாம்" என்று வேதபுரி கவரை தொட்டு காண்பித்தார்.

பெரியவர் சிரித்துக்கொண்டே "எனக்கா?" என்று கேட்டார்.

"ஆமாம் "என்று வாயை பொத்திய படி தலையை அட்டினேன்

தலையில் பிறை போல் செய்கை காட்ட .."சந்திராவுக்கு உத்தரவாறது வர சொல்லு .." என்று குரல்கள் பறந்தன.

சந்திரா ஓடி வந்தான்.

"உன்தம்பி அவனோட முதல் மாச சம்பளத்த எனக்கு கொடுத்திருக்கான்.நி என்ன பண்ற அதுலேந்து தெனைக்கும் அந்த காசு தீரர வரைக்கும் நான் ராத்திரி சாப்பிடறதுக்கு பால் வங்கி தர .." என்று அவனுக்கு உத்தரவு போட்டார்.





எனக்கு மிகுந்த மகிழ்ச்சி .நான்கு முறை நமஸ்கரித்து விட்டு உத்தரவு வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.





"டேய் சந்திரா உந்தம்பிக்கு பெரிய உத்தியோகம் ஆகி இருக்கமே ?எவளோட சம்பளம் ?" என்றார்கள் அங்கே தங்கி இருந்தவர்கள் .


சந்திரா மகிழ்ச்சியுடன் கூறினான்


"575" 1985 ல்



அன்புடன்

ராம்ஜி
9790778943
feedback:  ramkumar.v2009@gmail.com

Comments

Popular posts from this blog

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

Short story

ஸ்கூலுக்கு நேரமாச்சு