Birthday Party



என் வீட்டில் நடந்த ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.

"டாடி 200 ருபீஸ் கொடு " என்றான் என் பையன்
"இந்தா" கொடுத்தேன்
" ஆமா எதுக்கு இந்த 200 ருபீஸ்?"
"உலகத்துலேயே காச கொடுத்துட்டு எதுக்குன்னு கேக்கற மொதோ அப்பா நீயாதான் இருப்ப . எல்லாரும் எதுக்குன்னு கேட்டுட்டுதான் கொடுப்பாங்க "
"சரி எதுக்கு?"
"அம்மா பர்த்டே 25 ம் தேதி அதுக்கு கேக் வாங்கி கொண்டாடனும் . ஆனா அம்மா கிட்டக்க சொல்லிடாத . இது suspence ஆ இருக்கணும் . சரியா? "
அந்த நாளும் வந்தது ,
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை .,
என் மனைவி மாலை யாரையோ பார்பதற்காக வெளியில் போயிருந்தாள்.
"டாடி நானும் எங்க friends ம் மாடி ரூம்ல decorate பண்றோம் கொறஞ்சது 2 மணிநேரமாவது ஆகும் . ஒருவேள அம்மா வந்துட்டா கீழேயே வெச்சி சமாளிசிக்கோ நான் சொன்னபிறகு வந்தா போதும்."
"இதபாருடா நானும் உங்க அம்மாவும் 2 நிமிஷம் சேந்து பேசினாலே சண்டைலதான் போய்முடியும் . இதுல நிவேற 2 மணி நேரம் சமாளிக்க சொல்லற !! கடைசில டைவேர்சுலதான் போய் முடியும் . ரொம்ப ரிஸ்க் எடுக்காத. "
"நீ எல்லாம் என்ன அப்பா , தாத்தாவ பாரு எப்படி சமாளிக்கறாரு ?"
"அடேய் தாத்தாவுக்கு ரொம்ப வருஷமாவே ரெண்டு காதும் கேக்காது . சமாளிக்கறது ரொம்ப ஈசி . ஆனா எங்க விஷயத்துல ரெண்டுபேரும் WWF க்கு போகாத குறைதான்."
மாடி ரூமில் பலூன் கட்டி, HAPPY BIRTHDAY ஒட்டி எல்லா நண்பர்களும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள் .அவனது இரண்டு நண்பர்கள் தலையில் கோமாளி குல்லா போட்டிருந்தார்கள்.
"இது என்னடா கோமாளி குல்லா?"
"அதுவா எங்க கிளாசுல யாராவது பேக்குத்தனம் பண்ணின போட்டுவிடுவோம் . இப்ப தமாஷுக்காக போட்டுக்கிட்டு இருக்காங்க. "
அதனுள் என் மனைவி வந்து விடவே அவளை மாடி செல்லவிடாமல் கீழேயே உட்கார சொல்லிவிட்டு அவளுக்கு மிகவும் பிடித்த மோகன் சினிமா பட பாடல்களை DVD ல் போட்டுவிட்டுவிட்டேன். மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல் மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
நான் தினமலரில் வந்த குறுக்கு எழுத்து
போட்டிக்கு வார்த்தை தேடிக்கொண்டிருந்தேன்.
"Daddy bring Mummy" என்று என் மொபைலுக்கு SMS செய்தான் என் பையன் .
இருவரும் போனோம்
ஒரே இருட்டாக இருந்தது.
கதவை திறக்க அனைவரும் கோரசாக வரவேற்றார்கள்,
என் மனைவிக்கு ஒரே ஆச்சர்யம் மிகவும் மகிழ்சிவேறு.
candle ஏற்றி (அது இசையில் happy birthday பாடியது ) ஒரு பையன் பின்னாலிருந்து கலர் பேப்பர்களை கொட்டினான்.
எல்லோரும் கோரசாக happy birthday பாடினார்கள் . (அது என்ன இந்த பாடல் மட்டும் அபஸ்வரத்தில் தான் பாடவேண்டுமா? ) ,
என் மனைவி எனக்கு ஒரு கேக் ஊட்ட எல்லோரும் கேலி செய்தார்கள் . மொபைலில் போட்டோ எடுத்தார்கள் .
என் மனைவி தன் மகனுக்கு முத்தம் தந்து "ரொம்ப தேங்க்ஸ் பா . பாத்திங்களா என் பையன அவனுக்கு கொடுத்த பாக்கெட் மணில இருந்து எவ்ளோ அழகா செஞ்சிருக்கான் பாருங்க"
" ஆமாம் அவன் உன் பையனாச்சே !நல்ல சாமர்த்தியம் தான் "
"ஏங்க இங்க வாங்களேன் "
என்று என்னை தனியே கூப்பிட்டாள்.
"என்ன?"
"ஒரு 500 ரூபா கொடுங்களேன் "
கொடுத்தேன்
"எதுக்கு?"
"உலகத்துலேயே காச கொடுத்துட்டு எதுக்குன்னு கேக்கற மொதோ புருஷன் நீங்களா தான் இருப்பிங்க "
"சரி எதுக்கு ?"
"அது இல்ல அவன் friends க்கு நாம ஏதாவது பதில் மரியாத செய்யவேண்டாமா ?"
என்னமோ சம்மந்தி மரியாதை போல் கூறினாள்.
"அவன் கிட்டக்க நீங்கதான் எனக்கு காசுகொடுதீங்கன்னு சொல்லிடாதிங்க",
"சரிதான்.."
"இந்தாடா உன் friends க்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடு" என்று பெண்ணாய் பிறந்த கர்ணனாய் வாரி
வழங்கினாள்.
"daddy எப்படி 200 செலவு செஞ்சி 500 சம்பாதிச்சேன் ?"
"என் பேரன் என் பொண்ணுமாதிரியே இருக்கான் " என்று அவன் பாட்டி கூறியது நினைவுக்கு வந்தது.
எல்லோரும் அங்கிருந்து கிளம்ப
"டேய் நாளைக்கி மறக்காம மகேஷ் வீட்டுக்கு வந்துடு அவங்க தாத்தாக்கு 60 த் birthday கேக் வெட்டனும் ",
"ஏன்டா இத ஒரு business ஆகவே செய்யரின்களா?"
என் பைய்யன் பரபரப்பாக இருந்தான்
"என்னடா இன்னம் என்ன பரபரப்பு?"
"இல்ல இந்த குல்லவா ஜாக்கிரதையா வெக்கணும் நாளைக்கி வேணும் அதான் இடம் பாக்கறேன்."
"என் தலைல வெய் அங்கதான் Tolet போர்டு போட்டிருக்கேன் ",
கீழே போய் இங்கு நடந்ததை என் அம்மாவிடம் கூற போனேன் அப்படியே
அவர்கள்
பங்கான கேக்கையும் கொடுத்தேன்.
என் அம்மா வாசலில் பூக்காரியிடம்
பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்
"ராம்ஜி ரெண்டு ரூபா கொடுடா"
இந்தமுறை சுதாகரித்துக்கொண்டு
"எதுக்கு?" என்றேன்
"எதுக்கா? நல்லா இருக்குடா நீ
கேக்கறது? பெத்த அம்மாகிட்டக்க
போய் கணக்கு பாக்கற!
உன் பிள்ளையும் பொண்டாட்டியும்
கேட்டா மட்டும் கேள்வியே கேக்காம தற்ற ?,...."
நான் இரண்டு ரூபாயை கொடுத்துவிட்டு
வாரமலரை எடுத்து வைத்துக்கொண்டேன்
... மேலிருந்து கீழ் மூன்று எழுத்து
circus ல் இவரை கண்டாலே குழந்தைகள் சிரிப்பார்கள் ....

Comments

Popular posts from this blog

உங்களுக்கு சினிமால நடிக்க ஆசையா ?

Short story

ஸ்கூலுக்கு நேரமாச்சு