ஸ்கூலுக்கு நேரமாச்சு
(ஒரு கற்பனை துணுக்கு) "ராம்ஜி நீங்க இன்னைக்கி சாயந்திரம் வீட்டுக்கு கண்டிப்பாக வாங்களேன் " என்றாள் ஸ்ரீதரின் மனைவி. "உங்க ஸ்பெஷல் அடை பண்ணி வையுங்கோ நிச்சயம் வறேன் " அவசியம் இல்லாமல் போன் செய்யமாட்டாள் ஸ்ரீதரின் மனைவி மாலை சரியாக ஆறுமணிக்கு போய் சேர்ந்தேன் . "என்னம்மா அவசரமா வர சொன்னாயே என்ன ஆச்சு ?" "உங்களுக்கு முதல்ல சாப்பிட என்ன வேணும் ?" விருந்தோம்பலில் மிகசிறந்தவள் ஸ்ரீதரின் மனைவி. "உன்னோட ஸ்பெஷல் அடை செய்யேன் ? அது சரி எதுக்கு கூப்பிட்ட ?" "ராம்ஜி உங்க பிரெண்டோட போக்கு கொஞ்ச நாளா சரியாவே இல்ல நீங்கதான் கொஞ்சம் எடுத்து சொல்லணும் " "ஏம்மா நல்லத்தான இருக்கான் நேத்திக்கு கூட என் கிட்டக்க பேசினானே ?" " ராத்திரி தூங்கறதே கிடையாது எப்ப பார்த்தாலும் படிச்சுண்டே இருக்கார் ..." "படிக்கறது ஒண்ணும் தப்பு இல்லையேம்மா ? ஏன்? அவன் TDR Times க்கு எழுதறத பத்தி சொல்றையா?" "அதை பத்தியே நான் சொல்லல........ , பிரச்னை என்னன்னா...என் பெரிய பொண்ணோட பிளஸ் ஒன் புஸ்தகத்த வெச்சிண...