Tuition
எனக்கு டியுஷன் சொல்லிக்கொடுத்தவர்கள் சற்றே திரும்பி பார்க்கிறேன் எனக்கு தனி வகுப்பு எடுத்தவர்களை. வேடிக்கையாக உள்ளது இதனை பேரிடமா நான் படித்தேன்.? திருவாளர்கள் 1 / நாகேஸ்வர சாஸ்திரிகள்தான் அக்ஷராபியாசம் சொல்லிகொடுத்தார்கள். 2 / முதல் வகுப்பு படித்தபோது பீமா ராவ் . வயதானவர் .நான் ஒரு இடத்தில உட்காராமல் ஓடிக்கொண்டே இருந்ததால் என் இடுப்பில் ஒரு கயறு கட்டி அவர் கையில் கொடுத்திருந்தார்கள் அவரும் அதனை தன்னுடைய நாற்காலியில் கட்டி விட்டு எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார். விஷமம் செய்தால் அவரிடம் சொல்லி விடுவதாக என் அக்காக்கள் மிரட்டினர் . அனால் அவர் பரம சாது. 3 / நாராயணன் சார் . நீண்ட நகத்தை வைத்துக்கொண்டு கிள்ளுவார். ஒருமுறை எனக்கு கணக்கு சொல்லிகொடுத்தபோது அவர் போட்ட கணக்கிற்கு 100 க்கு 100 போட்டு வெறி குட் சார் என்றேன். நல்ல உதை கிடைத்தது. "நாளைக்கி டியுஷன் கிடையாது " " ஏன் சார் ?" "விஜயதசமி இல்லையா ? அதுனால. " "தினமும் விஜய தசமி இருந்தா நல்ல இருக்கும் இல்ல சார் ?" 4 / வாஞ்சி சார் ( நிச்சயம் பொய் பேச அவர் எனக்கு கற்றுத் தரவி...