மகாலிங்கம்
மகாலிங்கம் சில நாட்களுக்கு முன்பு வடபழனிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன், கூட்டம் அதிகமில்லை,என்னையும் சேர்த்து ஐந்து பேர ் இருந்தோம். ஒரு இளைஞன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் இருமிகொண்டிருந்தார் இரு பெண்மணிகள் (வேலைக்கு போய் கொண்டிருந்தார்கள் ) வேறு யாரும் இல்லை. கண்டக்டர் "பேப்பர் ல என்ன தம்பி செய்தி ?" என்றார் "என்ன அக்கிரமம் பாருங்க அம்பத்துர்ல ஒரு ஸ்கூல் பையன் வாத்தியார் திட்டினார்னு தூக்கு போட்டுகிட்டானாம் ..இந்த வாத்யாருங்களுக்கு எப்படி பாடம் சொல்லி தர்றதுன்னே தெரியல்ல ..பாவம் அந்த பையன் உசிரு போயிடுச்சி .." "ஏன் தம்பி அந்த வாத்தியார் ஏன் திட்டினாராம்.?" என்றார் பெரியவர். "அது ஒண்ணும் இல்லைங்க அந்தபையன்தான் எப்பையும் கிளாஸ் பஸ்ட் வருவானாம் .. இந்தவாட்டி அவனுக்கு உடம்பு சரி இல்லை ரெண்டு மாசம் ஸ்கூல் போகல்ல அதுனால் என்ன பண்ணிட்டான் முழு ஆண்டு தேர்வுல பிட் அடிச்சிட்டான் அதை அந்த வாத்தியார் பார்த்து கண்டிச்சிட்டு பேப்பர பிடிங்கிகிட்டு போயிட்டாரு .. இதுதான் விஷயம் ..இப்ப சொ...