தந்தி
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் செய்த சகல குற்றங்களையும் எல்லோரும் மன்னிப்பார்களாக ---- எனக்கு இந்த காலையிலேயே ஸ்ரீதர் ஏன் என் வீட்டிற்கு வந்து "தந்தி குடுக்க போகணும் வரையா ?" என்று கூப்பிடுகிறான் என்று நான் ஆச்சர்ய பட்டேன். "ஏன் என்னடா ஆச்சு ?" ராஜராம ஐயர் சென்னையில் இருந்தார். அவரின் வயதான தாயாரும் அவரின் சகோதரியும் திருவிடைமருதூரில் தனியே இருந்தார்கள். இவர்களுக்கு care taker ஆக அருகில் இருந்த ஒரு சிலரும் குறிப்பாக குலபதி ஐயர் மற்றும் வாஞ்சிசார் அவர்களும் அப்போது இருந்தனர். குலபதி ஐயரிடம் தன்னுடைய சில முக்கிய தஸ்தாவேஜுகளை குடுத்து வைத்திருந்ததோடு ஒரு சில பணபரிமற்றங்களும் செய்து வந்தார். திருவிடைமருதூர் வந்தவுடன் குலபதி ஐயரை உடனே தேட ஆரம்பித்து விடுவார். ஒரு சில நேரங்களில் ஆலோசனைகளும் கேட்பார். இதனால் குலபதி ஐயர் வீட்டில் உருளை கிழங்கு பொடிமாஸ் செய்தால் கூட " பாரு ராஜ ராம ஐயர் காசு .." என்று வரது சேகர் போன்றவர்கள் கமென்ட் கொடுத்தார்கள்.. ராஜ ராம ஐயர் இரண்டு அல்லது மூன்றுமாதங்களுக்கு ஒருமுறையாவது தனது பிளைமூத் காரில் வந...