சமய குறவர்கள்
நடந்த வருடம் தோராயமாக 1978 - 79 நாங்கள் அனைவரும் ஹையர் செகன்ட்ரி முதல் பாச் முதல் வருடம். நடந்த இடம் வாஞ்சி சார் வீட்டு வாசல் திண்ணை. "டே பசங்களா உங்களுக்கெல்லாம் நல்ல சேதி? இந்தவருஷம் Plus 1 First Year முதல் செட்டுங்கறதுனால பரிஷ்சை எழுதின எல்லோரையும் MGR பாஸ் போட சொல்லிட்டார் தெரியுமோ !" இது எனக்கு தெரிந்து நான் நேரே கேட்டு வாஞ்சி சார் சொன்ன ஒரு நிஜமான செய்தி. "ஏன்டா ஸ்ரீதர் உங்க சித்தப்பா சொல்றது நிஜமாடா ?" என்றேன் "ராம்ஜி.. எங்க சித்தப்பா எப்பையாவது தப்பி தவறிப்போய் நிஜமும் சொல்வார் !" "இது நல்ல இருக்கே!!" "ஆமா இவன் மட்டும் ரொம்ப அரிச்சந்திரன், ராம்ஜி.. எங்க அப்பா எப்பையாவது தான்டா தவறுவார் !" என்றான் ரமேஷ் "இதுவும் நல்ல இருக்கு " " இத மீறி அவர கேட்டா 'வள்ளுவரே சொல்லி இருக்கார் பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின் ' ஒன்னும் தப்பில்ல அப்படிம்பார் ஆனா ஒன்னு ராம்ஜி .. அவர் சொல்றதால யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது." அவர் பாட்டுக்கு கோயில் திருக்குளம் ...